சேலம் தெருவில் "சத்தம்" கேட்டுச்சா? அன்னைக்கும் கேட்டுச்சே.. என்னவா இருக்கும்? குழம்பிபோன வாழப்பாடி
சேலம்: சேலம் மாவட்டத்தில் திடீரென கேட்ட சத்தம், சுற்றுவட்டார பகுதி மக்களை கலங்கடித்துவிட்டது. இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் பொதுமக்கள் விலகாத நிலையில், ஒருவேளை நில அதிர்வாக இருக்குமோ? என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
சேலம் மாவட்டம் ஏற்காடு, குப்பனூர், வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், ஓமலூர், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 1 மணியளவில் வெடி வெடிப்பது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பொதுமக்கள் பயந்துவிட்டார்கள்..

ஒருவேளை நில அதிர்வு காரணமாக சத்தம் ஏற்பட்டதா? என்றும் அச்சத்துடன் வீடுகளிலிருந்து வெளியே ஓடிவந்தனர்.. இதனால், சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
ஆனால் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வானிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பகத்தில் இருக்கும் ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வுக்கான தரவுகள் எதுவும் பதிவாகவில்லை என்கிறார்கள்.. சத்தம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனாலும், அடிக்கடி சேலம் மாவட்டத்தில நில அதிர்வு உணரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வீடுகள் அதிர்வு: கடந்த வருடமும் இப்படியொரு சம்பவம் நடந்தது... வாழப்பாடி அருகே உள்ள நீர்முள்ளி குட்டை பகுதியில் இன்று ஆங்காங்கே உள்ள வீடுகளில் நில அதிர்வு லேசாக உணரப்பட்டது. நில அதிர்வை தொடர்ந்து அப்போதும் நேற்றைய தினம் போலவே, மக்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்பொழுது அருகிலுள்ள வீடுகளிலும் இதே போன்று உணரப்பட்டதாக சொன்னார்கள்.
லேசான நில அதிர்வு ஏற்பட்டதோடு வீடுகளும், லேசாக குலுங்கியதாக தெரிகிறது. எனவே, அந்த பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, லேசான சத்தம் கேட்டதாக தெரியவந்தது. ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வானிலை ஆராய்ச்சி மைய கருவியில் நில அதிர்வுக்கான அறிகுறிகள் எதுவும் பதிவாகவில்லை..
நில அதிர்வுகள்: நில அதிர்வால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், பொதுமக்கள் ஜன்னல், கதவுகள், பாலங்கள் அருகில் நிற்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியிருந்தது.
எனினும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் கீழ் அடுக்குப் பாறைகள் இருப்பதால் லேசான நில நடுக்கம் ஏற்படும் என்றும், சேலம் நில அதிர்வில் 3வது இடத்தில் இருந்தாலும், பெரிய நில நடுக்கம் வர வாய்ப்பில்லை என்றும் அப்போது நில அதிர்வு வல்லுநர்கள் இதுகுறித்த காரணங்களை கூறிவருகிறார்கள்.
அதிர்ச்சி: சேலம் மாவட்டத்தில் அடிக்கடி இப்படி நில அதிர்வுகள் ஏற்பட என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லையாம்.. கடந்த 20 வருடங்களுக்கு முன்பும் இப்படித்தான் நில அதிர்வு ஏற்பட்டதால், ஒருவேளை இதுவும் அப்படியிருக்குமோ என்று பயந்துவிட்டோம் என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள் அந்த பகுதி மக்கள்!!












Click it and Unblock the Notifications