ஜாக்கெட், சேலையை அகற்றி.. கருங்கல்லால் உடலை கட்டி.. தோட்டத்தில் நடந்த பயங்கரம்.. என்ன நடந்தது?
கிணற்றில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர்
சேலம்: தோட்டத்து கிணற்றில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண் யார் என்பது குறித்தும், அந்த பெண்ணை கொலை செய்தவர் யார் என்பது குறித்தும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அசோகன்.. இவர் ஒரு விவசாயி.. 43 வயதாகிறது.. இவருக்கு 2 மனைவிகள்.
முதல் மனைவி விஜயாவுக்கு 37 வயது, செல்வராணிக்கு 35 வயது.. விஜயாவுக்கு குழந்தை இல்லாததால், செல்வராணியை 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

மரணம்
இந்நிலையில், கடந்த மார்ச் 31ம் தேதி மாலை, அசோகனுக்கும் செல்வராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.. பிறகு அன்றைய தினம் இரவே செல்வராணியை காணவில்லை.. இதனிடையே, ஒரு கிணற்றில் நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக வீரகனூர் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.. இதனால் போலீசாரும் கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் விரைந்து சென்றனர்.. அப்போது கிணற்றுக்குள் நிர்வாணமாக கிடந்த அந்த பெண்ணின் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்ததை கண்டனர்.

தங்கை
பிறகு, சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போதுதான் இறந்த பெண் அசோகனின் 2-வது மனைவி செல்வராணி என்பது தெரியவந்தது.. பிறகு, இதனால் செல்வராணியின் குடும்பத்தினர் சடலத்தை கண்டு கதறி கதறி அழுதனர்.. தன் தங்கையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அது சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்றும், அண்ணன் ஆனந்தமுருகன் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்..

விஏஓ
இதற்காகவே 3 தனிப்படைகளையும் அமைத்து, கொலையாளிகளையும் தேட ஆரம்பித்தனர். மற்றொருபக்கம் செல்வராணியின் செல்போனையும் ஆராய்ந்தனர்.. அதில் வந்திருந்த அழைப்புகளின் அடிப்படையில் செல்போன் நம்பர்களை வைத்தும் விசாரணை ஆரம்பமானது.. இந்த சமயத்தில்தான், திடீரென அசோகன் சகோதரியின் கணவர் சிவராஜ் வெள்ளையூர் விஏஓவிடம் சரணடைந்தார்.. இது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது..

ராசாத்தி
இதனையடுத்து வீரகனூர் போலீசில் சிவராஜ் ஒப்படைக்கப்பட்டார். சிவராஜ் போலீசாரிடம் தந்த வாக்குமூலம் இதுதான்: என் மனைவி பெயர் ராசாத்தி.. ஆனால், பூர்வீக சொத்தில் என்னுடைய மனைவிக்கு எதுவும் கொடுக்காமல், மைத்துனர் அசோகன் 7 ஏக்கர் நிலைத்தை அவரது இரண்டு மனைவிகளுக்கும் எழுதி வைத்துவிட்டார்.. இதுதான் எங்களுக்குள் தகராறாக வெடித்தது..

செல்வராணி
கடந்த 31 ம் தேதியும் தகராறு ஏற்பட்டது... அப்போது செல்வராணி எங்கோ வெளியில் சென்றுவிட்டு, தனியாக இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.. அவரை வழிமறித்து சொத்து குறித்து பேசினேன்.. எங்களுக்குள் நடுரோட்டிலேயே வாக்குவாதம் முற்றியது. ஒருகட்டத்தில் என்னை ஆபாசமாக பேசினார் ராசாத்தி.. தரக்குறைவாக பேசியதால் ஆத்திரமடைந்த நான், கட்டையால் அவரது மண்டையில் ஓங்கி அடித்துவிட்டேன்.. இதில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்..

ஜாக்கெட்
அதை பார்த்து பயந்துபோன நான், சேலை, ஜாக்கெட்டை கழற்றி, கை, கால்களை கருங்கல்லால் கட்டி, அங்கிருந்த தோட்டத்து கிணற்றில் தூக்கி போட்டுவிட்டேன்" என்றார். மர்மநபர்கள் யாரோ பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து கிணற்றில் வீசியதுபோல தெரியட்டும் என்பதற்காகத்தான் நிர்வாணமாக்கி கிணற்றில் வீசினேன்" என்றார். இதையடுத்து, வீரகனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சிவராஜை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications