கூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த அதிர்ச்சி காரியம்.. பரிதவிப்பில் 3 வயது குழந்தை!
மனைவியை கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்
Recommended Video
சேலம்: குடும்பம் நடத்த கூப்பிட்டும் வராத மனைவியை, முட்புதர் பகுதியில் இழுத்து சென்று, கத்தியால் அறுத்து கொன்றுள்ளார் காதல் கணவர்!
சேலம் அருகே உள்ள அல்லிக்குட்டை கங்காபுதூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. 26 வயதாகிறது. இவர் ஒரு கட்டிட தொழிலாளி. 21 வயதில் மோகனேஸ்வரி என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இவர்கள் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.. 4 வருஷத்துக்கு முன்பு உயிருக்கு உயிராக காதலித்து, கல்யாணமும் செய்து கொண்டவர்கள். கோவையில் வீடு எடுத்து 3 வருடமாக வசித்து வந்தனர். ஆனால், தம்பதிக்குள் சண்டை வந்துவிட்டது. அதனால், கோபியுடன் கோபித்து கொண்டு, மோகனேஸ்வரி 2 மாதத்திற்கு முன்பு குழந்தையை துக்கி கொண்டு அம்மா வீட்டுக்கே வந்துவிட்டார்.
அதன்பிறகு, துணிக்கடை ஒன்றில் வேலைக்கும் போக ஆரம்பித்தார். வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்கு வரும் மகள், நேற்று இரவு ரொம்ப நேரம் ஆகியும் வராததால், இவரது தந்தை பதட்டமானார். அதனால், பஸ் ஸ்டாண்ட் சென்று பார்க்கலாம் என்று 10 மணிக்கு மேல் கிளம்பி போனார். அப்போதுதான், கங்காபுதூர் அருகே ஒரு பெண்ணை கழுத்து அறுத்து யாரோ கொன்றுவிட்டார்கள் என்று சொல்லவும், பதறி கொண்டு ஓடினார்.
அங்கு தனது மகள் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அலறினார். தகவலறிந்து வீராணம் போலீசார் விரைந்து வந்து, விசாரணையை ஆரம்பித்தனர். குடும்ப விவகாரத்தில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. கணவர் கோபி, கங்காபுதூரில் நேற்று வந்துள்ளார்.. வேலை முடித்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த மனைவியை குடும்பம் நடத்த வருமாறு கூப்பிட்டுள்ளார். அதற்கு மனைவி மறுப்பு சொல்லவும், இது வாக்குவாதமாக நடுரோட்டிலேயே நடந்துள்ளது.
அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத முட்புதர் பகுதி என சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கோபி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மோகனேஸ்வரி சுருண்டு விழவும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் கோபி. இப்போது போலீசார் கோபியை தீவிரமாக தேடி வருகிறார்கள். தாயை இழந்து, தந்தையையும் பிரிந்து.. இவர்களது 3 வயது குழந்தை தவித்து வருகிறது!
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications