"பென்னிக்ஸ் என்றால் பொங்கி எழுவார்கள்.. சாமியார் என்றால் மூடி மறைப்பார்களா".. குவியும் ட்வீட்டுகள்
சேலம் சாமியார் தற்கொலை விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது
சேலம்: "குழிக்குள் நிர்வாண பூஜை செய்தாரா சாமியார்? பென்னிக்ஸ் என்றால் பொங்கி எழுவார்கள், சாமியார் என்றால் மூடி மறைப்பார்களா" என்று சேலம் சிவனடியார் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ட்விட்டரில் பலரும் நீதி கேட்டு வருகின்றனர்... அத்துடன், #justice for Saravanan என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பக்கத்தையும் அதில் டேக் செய்தும் கருத்து பதிவிட்டும் வருகின்றனர்.
Recommended Video
2 நாளாக ஒரு தற்கொலை சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. நடந்த சம்பவம் இதுதான்:
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே புளியம்பட்டி குண்டாங்கல்காடு என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் சரவணன்.. இவருக்கு 42 வயசாகிறது.. மனைவி பெயர் சாந்தி.. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மந்திரவாதி
சரவணன் ஒரு சிவனடியார்.. மந்திரவாதி என்றும் சொல்கிறார்... அமாவாசை, விசேஷ நாட்களில் பூஜை செய்வாராம்... நோய்கள் குணமாக வேண்டி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இவரிடம் பலர் தினமும் தேடி வருவார்கள்.. அவர்களுக்கு சரவணன் தாயத்து கட்டுவார்.. அப்போது மந்திரித்த கயிறுகளையும் அவர்களுக்கு தருவார். எப்பவுமே காவி வேட்டி கட்டிக் கொண்டும், தாடி வளர்த்தும் இருப்பார்.

அமாவாசை
வேற வேலைக்கு போவது கிடையாது. இதில் அமாவாசை ஆகிவிட்டால், அன்று சரவணன் பேய் ஓட்டுவாராம். தண்ணீர் தொட்டி அமைப்பதற்காக அந்த குழியை வெட்டியிருக்கிறார்கள்.. அந்த குழி பக்கத்தில்தான் ஒரு சிவன் போட்டோவை வைத்து, ருத்ராட்ச மாலையை வைத்துக் கொண்டு சரவணன் பேய் ஓட்டுவாராம்.

தாயத்து
இந்நிலையில், கடந்த 14ம் தேதி சாயங்காலம், 2 பெண்களுக்கு மந்திரித்து, பூஜை செய்து, தாயத்து கட்டிக் கொண்டிருந்தார். அப்போது சரவணன் அரை நிர்வாண கோலத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.. சற்று நேரத்தில், தேவூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேலும், மற்ற போலீசாரும் அங்கு வந்துள்ளனர்.. சரவணனை அடித்து உதைத்துள்ளதாகவும் தெரிகிறது.

அந்தோணி மைக்கேல்
மறுநாள் காலையில் இருந்தே சரவணனை காணவில்லை.. அதனால் அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில்தான், தன் நண்பர்களுக்கு செல்போனில் வீடியோ ஒன்றை சரவணனே அனுப்பியிருந்தார். அதில் சரவணன் பேசும்போது, "என்னோட இந்த முடிவுக்கு, மன உளைச்சலுக்கு எஸ்ஐ அந்தோணி மைக்கேல்தான் காரணம்... என்னை ரொம்ப அடிச்சதால மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன்... என்னோட இந்த கஷ்டமான முடிவுக்கு வேற யாரும் காரணமில்ல.

நமச்சிவாய
அதிகார தோரணையில் எத வேணாலும் செய்யலாம்னு அந்தேணி மைக்கேல் அடிச்சார்.. நான் செத்த பிறகு ஆவியாக வந்து பழிவாங்குவேன்.. எனக்கு விடுத்த மிரட்டல் அத்தனையும் எஸ்ஐ அனுபவிப்பார்.. என் சாபத்திலிருந்து, உன்னோட குடும்பம் தப்பவே முடியாது. சிவன் மேல் ஆணையாகச் சொல்கிறேன். என்னோட மனசு எப்படி பாடுபடும். அப்பா உன் கிட்ட வரேன் பா.. நமச்சிவாய" என்று கூறியிருந்தார்.

அதிர்ச்சி
இந்த வீடியோவை பார்த்து ஷாக் ஆன நண்பர்களும், குடும்பத்தினரும் பல இடங்களில் சரவணை தேட ஆரம்பித்தனர்.. பிறகு அவர் வீட்டுக்கு பக்கத்திலேயே காட்டுப்பகுதியில் சரவணன் சடலம் கிடந்தது.. பாறைகளுக்கு நடுவே அழுகிய நிலையில் அந்த சடலத்தை தேவூர் போலீசார் கண்டெடுத்தனர்.

சாபம்
சரவணின் இந்த மரண வாக்குமூலம் சோஷியல் மீடியாவில் வைரலானது.. அதில் சரவணன் முகமெல்லாம் கோபத்தில் கொப்பளித்து காணப்படுகிறது... பற்களை நரநரவென கடித்து கொண்டே, ஒவ்வொரு வார்த்தைகளையும் பேசுகிறார்.. கிட்டத்தட்ட சாபமும் விட்டுள்ளார்.. அளவுக்கு அதிகமாகவே அவர் மனமுடைந்து போயுள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் தெரியவருகிறது.

விசாரணை
இதுகுறித்து போலீசார் முறையான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என்றாலும், இந்த தற்கொலையானது பல்வேறு சந்தேகங்களையும் கிளப்பி உள்ளது.. சரவணன் எப்பவுமே தன் வீட்டு பகுதியில் உள்ள ஒரு குழியில் வைத்துத்தான் பூஜை செய்வாராம்... அப்படித்தான் அன்று பூஜை செய்யும்போது 2 பெண்கள் சென்றுள்ளனர்.

அரை நிர்வாணம்
இதை பற்றி போலீசார் தரப்பில் சொல்லும்போது, "குழிக்குள் வைத்து நிர்வாண பூஜை செய்வதாக தங்களுக்கு தகவல் கிடைக்கவும்தான் அங்கு சென்று விசாரித்தோம்.. அங்கே ஒரு மறைவான இடத்தில், தோண்டப்பட்டிருந்த ஒரு குழிக்குள் குமாரபாளையத்தை சேர்ந்த 2 பெண்களும், சாமியார் சரவணனும் உட்கார்ந்திருந்தார்கள்... 3 பேருமே போதையில் தள்ளாடி கொண்டிருந்தார்கள்.. கணவருக்கு தெரியாமல் பேய் ஓட்டுவதற்காக வந்ததாக அந்த பெண்கள் சொன்னார்கள்.

சாமியார்
"சரக்கு அடிச்சால் பேய் போய்விடும்... இல்லாட்டி, அந்த பேய் உங்களை கொன்னுடும்"ன்னு சாமியார் சொன்னார்.. அவர் கட்டாயப்படுத்தியதால்தான் குடித்தோம் என அந்த பெண்கள் எங்களிடம் சொன்னார்கள்.. அதனால், இனிமேல் பெண்களைத் தனிமையில் குழிக்குள் உட்கார வைத்து இப்படி பூஜை செய்யக் கூடாது... தாடியைச் ஷேவ் செய்துவிட்டு, வேலைக்கு போகணும்.. தப்பான செயலில் ஈடுபடக் கூடாது" என்று சரவணனை வார்னிங் மட்டுமே செய்தோம்" என்கிறார்களாம்.

ட்விட்டர் ஹேஷ்டேக்
ஆனால் மற்றொரு பக்கமோ, சாமியார் சரவணனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பலரும் நீதி கேட்டு வருகின்றனர்... சரவணன் கடைசியாக பேசிய அந்த வீடியோவை பாஜகவின் காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் ட்விட்டரில் பதிவிட்டு நீதி கேட்டு வருகின்றனர்.. மேலும் #justice for Saravanan என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பக்கத்தையும் அதில் டேக் செய்தும் கருத்து பதிவிட்டும் வருகின்றனர்.

விசாரணை
அத்துடன் இந்த சம்பவத்தை சாத்தான்குளம் சம்பவத்துடன் ஒப்பிட்டும், கேள்வி எழுப்பி வருகின்றனர்.. பென்னிக்ஸ் என்றால் பொங்கி எழுவார்கள், சாமியார் என்றால் மூடி மறைப்பார்கள் என்று கொந்தளித்து பதிவிட்டும் வருகின்றனர்.. தமிழக போலீசார் தொடர்ந்து இந்து வழிபாட்டு முறைகளில் பாகுபாடு காட்டி வருவதாகவும், சிவனடியார் என்ன தவறு செய்தார்? ஏன் அவரை எஸ்ஐ தற்கொலைக்கு தூண்டினார் என்றும் கேள்விகள் வந்தவண்ணம் உள்ளன.

உண்மை என்ன?
எனவே, இந்து மதவாதிகளுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதலாக இந்த விவகாரம் வெடித்து கிளம்பாமல், அதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும்.. மேலும், ஒரு சிவனடியார் தற்கொலை வரை சென்றிருக்கிறார் என்றால், நடந்த சம்பவம் என்ன என்பது குறித்தும், அதன் உண்மை தன்மையையும் பொதுமக்களுக்கு வெளிக்கொரண வேண்டியதும் உடனடி அவசியமாக உள்ளது!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications