தொடர்ந்து உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்.. 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சேலம்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணை முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கும். எனவே தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
நீர் திறந்து விடப்படுவது குறித்து முன்னெச்சரிக்கையாக தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீர்வளத்துறை சார்பில் 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

அதில், "மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (28.06.2025) நண்பகல் 12.00 மணியளவில் 117.390 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டும் என்றும், அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கனஅடி முதல் 75,000 கன அடி வரை எந்நேரத்திலும் திறந்துவிடப்படும் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வரிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இக்கடிதம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மாயிலாடுதுறை, நாகபட்டினம் மற்றும் கடலூர் என 11 மாவட்ட ஆட்சியர்களுக்கும்
அரசு செயலாளர் நீர்வளத்துறை, அரசு முதன்மை செயலாளர் ஆணையாளர், 11 மாவட்டங்களின் முதன்மை தலைமைப்பொறியாளர், தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், செயற்பொறியாளர், வருவாய்க் கோட்டாட்சியர், ஆணையாளர், உதவிப்பொறியாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூரிலிருந்து திறக்கப்படும் நீர் முதலில் சேலம் மாவட்டத்தின் நீர் நிலைகளை நிரப்புகிறது. அதனை தொடர்ந்து, ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பாய்கிறது. அங்கிருந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி கூடுதுறையில் காவிரியுடன், பவானி ஆறும் இணைகிறது. இதனால் நீர் அதிகரிக்கிறது. இதன் பின்னர் திருச்சிக்கு வந்து அங்கு இரண்டு பகுதிகளாக பிரிகிறது.
1. காவிரி ஆறு
2. கொள்ளிடம் ஆறு
காவிரி ஆறு திருச்சியிலிருந்து டெல்டா மாவட்டங்களை நோக்கி பாய்கிறது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நீர் நிலைகளை நிரப்புகிறது. இரண்டாவதாக உள்ள கொள்ளிடம் ஆறு, அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு பாய்கிறது. இறுதியாக இரண்டு ஆறுகளும் வங்கக்கடலில் கலக்கின்றன.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications