50 அடியை அதிரடியாக எட்டிய மேட்டூர் அணை.. கர்நாடகா கதவை சாத்தினாலும் வருண பகவான் கருணை
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 50 அடியை எட்டியுள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் குடிநீருக்காக மட்டுமே விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை: நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பொழியவில்லை. பல ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்று கூறி தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகா. கிருஷ்ணராஜ சாகர், கபிணி அணைகளில் நீர் இருப்பு அபரிமிதமாக இருந்தாலும் ஷட்டர்களை மூடிவிட்டது கர்நாடகா. தமிழகத்தின் பங்கு தண்ணீரை கர்நாடகா தர மறுத்தாலும் வருண பகவான் கருணையினால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக காவிரி ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு கறார் காட்டி வருகிறது. கேட்டால் தங்களுக்கு குடிநீருக்கே தண்ணீர் இல்லை என்று காரணமும் சொல்கிறது. உச்ச நீதிமன்றம் அழுத்தம் கொடுக்க தமிழகத்திற்கு சற்றுதான் தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா. ஆனால், அதற்கு எதிராக கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு, உருவ பொம்மை எரிப்பு என போராட்டங்கள் தீவிரமடைந்தன
காவிரியில் தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீர் வராததாலும், மழை பொய்த்துப்போனதாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. அதே நேரத்தில் பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகமாக இருந்ததால் அணை வறண்டது. இதனால் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த 10ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த தமிழகத்திற்கு அக்டோபர் 31 வரை வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு போட்டது. ஆனால் அந்த உத்தரவுக்கு செவி சாய்க்க மறுக்கிறது கர்நாடக அரசு. கர்நாடகா கதவை சாத்தினாலும் வருணபகவான் கருணையால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயரத் தொடங்கியது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 50 அடியை எட்டியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 4,334 கன அடி என்று இருந்த தண்ணீர் வரத்து 4,496 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 50.50 அடியை எட்டியது. அணையில் 18 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக மட்டும் திறக்கப்படுகிறது.
-
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications