மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடியாக சரிவு.. நீர் திறப்பு நாளை முதல் நிறுத்தம்.. விவசாயிகள் கவலை
சேலம்: கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைந்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடியாக சரிவடைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதால் நாளை 8ஆம் தேதி முதல் டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து விட்டது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 13 ஆண்டுகளுக்கு பின் 32 அடியாக குறைந்துள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். ஜூன் 30ஆம் தேதியன்று மொத்தம் 13,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், நீர்வரத்து தொடர்ந்து குறைந்ததால் விநாடிக்கு 3000 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டது.
அணையில் நீர் இருப்பும் குறைந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீர் நாளை 8 ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது.
தற்போது மேட்டூர் அணையில் 8 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளதால் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படும். தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா வழங்க மறுக்கிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை-யில் 101 அடி தண்ணீரும், கபிணி அணையில் 70 அடிக்கு மேல் தண்ணீரும் இருப்பு உள்ளது. கர்நாடகாவில் வறட்சி நிலவுவதாக கூறி தண்ணீர் திறந்து விட அடம் பிடிக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது கர்நாடகா அரசு.
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும். வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் தெரிவித்துள்ளனர். காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் போராடத் தயாராகி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications