பொங்கும் ஒகேனக்கல் அருவிகள்.. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர்.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 14000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஓகேனக்கல் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க 3வது நாளாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் கை கொடுக்கவில்லை. கர்நாடகா, கேராளவிலும் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவிற்கு பருவமழை பெய்யவில்லை. இதன்காரணமாக காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைந்தது. இதனையடுத்து சட்டப்போராட்டம் நடத்த தயாரானது.
இதனிடையே கடந்த 9ஆம் தேதி வரை, 37.9 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், பருவமழை தாமதம் காரணமாக 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி நீரை திறந்துவிடக் கோரிய தமிழ்நாட்டின் கோரிக்கையை கர்நாடகா ஏற்க மறுத்ததால் தமிழ்நாடு நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அங்கு தற்போது பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதற்கிடையே அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதனையடுத்து தற்போது பிலிகுண்டுவிற்கு விநாடிக்கு 14000 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க 3வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணைக்கு தற்போது விநாடிக்கு 9500 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு 6000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 53 அடியாக உள்ளது. நீர் இருப்பு 20 டிஎம்சியாக உள்ளது. தற்போது மழை அதிகரித்து தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் இருக்கும் 4 அணைகளையும் சேர்த்து மொத்த கொள்ளளவான 114.57 டிஎம்சியில் 93.54 டிஎம்சி தண்ணீர் உள்ளது. கர்நாடகாவின் மொத்த இருப்பில் 82 சதவீதம் தண்ணீர் கர்நாடகா வசம் இருப்பில் இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் கடும் வறட்சியை சந்தித்து வருவதாக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால் கடும் வறட்சியை சந்தித்து வருவதாக அவர் கூறியுள்ளார். 15 நாள்களுக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் டி.கே. சிவக்குமார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications