குழந்தையை யாருடனும் ஒப்பிடாதீர்கள்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!
சேலம்: குழந்தைகளை யாருனுடம் ஒப்பிட வேண்டாம் என்று பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அண்மைக் காலமாக பள்ளி மாணவர்களின் தற்கொலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே தமிழக அரசு, நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அன்பில் மகேஷ் பேட்டி
இந்த நிலையில் சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மலைவாழ் மக்களை கல்வியில் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் ஏற்காடு மலைப்பகுதிகளில் இடியும் தருவாயில் உள்ள பள்ளியை உடனடியாக இடித்து புதிய பள்ளி கட்டிடங்களை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி விவகாரம்
தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆயிரத்து 31 பள்ளிகளில் மோசமாக உள்ள கட்டிங்களை இடித்து புதிய கட்டிடங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடனடி நடவடிக்கையாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் வேறு பள்ளியில் படிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அரசு தயாராக உள்ளது. அதேபோல் பெற்றோரிடம் பேசி விண்ணங்களும் பெறப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை விரைவில் தொடங்குவோம்.

பெற்றோருக்கு கோரிக்கை
இந்த சூழலில் பெற்றோர்கள் மற்ற குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று தான் அதிகமாக வேண்டுகோள் விடுத்து வருகிறோம். ஏனென்றால், கொரோனாவுக்கு பின் நேரடியாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கக் கூடாது. மாணவர்கள் விளையாடுவதற்கும், சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்று பெற்றோர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். பள்ளி மாணவ மாணவிகள் விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஒத்துழைப்பு தேவை
இதற்காகவே தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக ஒட்டுமொத்தமாக பெற்றோர், ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதேபோல் தனியார் பள்ளிகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பள்ளிகள் வைக்கக் கூடாது. அதேபோல் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications