மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக உயர்வு!
சேலம்: காவிரியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் பெய்யும் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பே மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் மேட்டூரில் திறக்கப்பட்டது.
காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக தொடர்கிறது. 3வது நாளாக இன்றும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு 4வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு 15500 கன அடியாக உயர்ந்து உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, தற்போது 90,873 கன அடியாக அதிகரித்து உள்ளது.
கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து நீர் வெளியேற்றப்பட்டதும் இந்த அதிக நீர் வரத்திற்கு காரணம் ஆகும். மேட்டூர் ஆணை வரலாற்றில் 68வது முறையாக அணை 100 அடியை எட்டியுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. முன்னதாக கோடை காலத்திலேயே விடாமல் மழை பெய்து வந்தது. அப்போது குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் தேதி அன்று நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். சுதந்திரம் அடைந்த பின் இதற்கு முன் இப்படி மே 24ம் தேதியே ஒருமுறை கூட மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது இல்லை. அதாவது கடந்த 60 வருடங்களில் ஒருமுறை கூட மேட்டூர் அணை இவ்வளவு சீக்கிரம் திறக்கப்பட்டது இல்லை.
இதையடுத்து நீர் பாசன பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications