வீரப்பன் மகள் வித்யாராணி VS பாமகவினர்.. மேட்டூரில் கடும் வாக்குவாதம்.. பரபரப்பு
சேலம்: மேட்டூர் அருகே வாக்களிக்க வந்த கிருஷ்ணகிரி நாம் தமிழர் வேட்பாளரும் வீரப்பனின் மகளுமான வித்யாராணியுடன் பாமகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் மாலை 6 மணியுடன் முடிவடைந்துவிட்டது. தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாக்குப் பதிவில் காலை முதலே அரசியல் கட்சியினர் வாக்களித்த வண்ணம் இருந்தனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் இன்று மேட்டூருக்கு வாக்களிக்க வந்தார். குள்ளமுடையானூரில் தனது ஆதரவாளர்களுடன் காரில் வந்த அவர் வாக்குச் சாவடிக்கு அருகே காரை நிறுத்துவிட்டு இறங்கி நடந்துச் சென்றார்.
வித்யாராணியும் அவருடைய ஆதரவாளர்களும் வாக்குச் சாவடி மையத்திற்கு உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கு வாக்களிக்க வரிசையில் நின்றிருந்த பாமகவை சேர்ந்த பிரமுகர் கோவிந்தன், வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும் என கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை வெளியேறுமாறு கூறினார்.
இதனால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு மோதல் ஏற்படும் சூழலும் நிலவியது. வாக்குச் சாவடியில் போலீஸார் இருந்த போதிலும் அவர்களுக்குள்ளான மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் ரோந்து பணியில் இருந்த போலீஸார் வரவழைக்கப்பட்டு பின்னர் வித்யாராணி வாக்களித்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போதும் வெளியே இருந்த பாமகவினருடன் வித்யாராணியின் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் அங்கு கூடுதலாக வரவழைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இருந்து கார்களை வெளியே எடுக்கும் படி கூறியதை அடுத்து அங்கிருந்து அவர்கள் கிளம்பி சென்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications