நகைக்காக இப்படியுமா?.. மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொன்று.. மூக்கு, காதை அறுத்து சென்ற கொடூரம்
சேலம்: நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கல்லால் தாக்கிக் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மூதாட்டியின் காது மற்றும் மூக்கை அறுத்துச் சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு, நாடுகளுக்கிடையேயான போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சரசரவென்று உயர்ந்து வருகிறது. ஒரு பவுன் தங்கம் விலை 70 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், விலை உயர்வு காரணமாக தங்கம் அணிந்து கொண்டு வெளியில் செல்வதற்கே மக்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.

நகைப் பறிப்பில் ஈடுபடும் நபர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து பறித்துச் செல்லும் சம்பவங்களே பெரும்பாலும் நடைபெற்று வந்தது. ஆனால், தற்போது நகைக்காக கொலை செய்யும் சம்பவங்கள் நிகழ்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மூதாட்டியின் காது மற்றும் மூக்கை அறுத்துச் சென்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள சின்னேரிகாடு பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. 68 வயதான சரஸ்வதி சின்னேரிகாடு பகுதியில் விவசாயம் செய்வது மற்றும் மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். சரஸ்வதி தினந்தோறும் வனப் பகுதியை ஒட்டியுள்ள தனது விவசாய நிலத்துக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், சரஸ்வதி நேற்று காலை வழக்கம்போல மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உறவினர்கள் சரஸ்வதியை தேடி விவசாய நிலத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு தலையில் பலத்த காயமடைந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் சரஸ்வதி சடலமாகக் கிடந்துள்ளார்.
மூதாட்டியின் தலையில் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். சரஸ்வதியின் காது, மூக்கில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையுடன் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த கொடூர கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது யார், வெளிநபர்கள் ஊருக்குள் வந்து சென்றனரா என பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல், சரஸ்வதியின் ஆடைகளும் களைந்த நிலையில் காணப்படுவதால் அவரைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
சேலம் மக்களுக்கு ஜாக்பாட்.. 210 ஏக்கர் நிலம் ரெடி பண்ணுங்க..!கோயம்புத்தூர் உடன் நேருக்குநேர் போட்டி? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications