ஏட்டையா முதலில் என் பெயரை எழுதுங்க.. வடிவேலு பட பாணியில் நடந்த சம்பவம்.. தலைசுற்றி போன சேலம் போலீஸ்
சேலம்: சேலத்தில் தனது 2-வது மனைவியை காணவில்லை என்று அந்த பெண்ணின் மூன்றாவது கணவர் புகார் அளிக்க வந்துள்ளார். புகார் மனுவை வாங்கி படித்ததும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் அப்படியே கண் முன் வந்துள்ளது. போலீசாரை தலை சுற்ற வைத்த வழக்கு பற்றி இங்கே பார்க்கலாம்.
மருதமலை படத்தில் போலீஸ் ஏட்டாக இருக்கும் வடிவேலுவிடம் ஒரே பெண்ணுக்கு 4 பேர் கணவர் என வந்து சண்டை போடுவார்கள்... காமெடிக்காக எடுக்கப்பட்டு இருக்கும் இந்த காட்சியை போன்ற சம்பவம் சேலத்திலும் நடந்துள்ளது. அதாவது, தனது 2-வது மனைவி மகனுடன் மாயமானது குறித்து புகார் கொடுக்க வந்த டிரைவர், தனது மனைவிக்கு நான் 3-வது கணவர் என்று கூறியதால் அவரை விசாரித்த போலீசார் தலை சுற்றி போயினர். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு வாலிபர் ஒருவர் புகார் அளிக்க தயங்கியபடியே வந்தார். இதைக் கவனித்த போலீசார் அந்த வாலிபரிடம் என்ன விவரம் என்று கேட்டனர். அப்போது, தனது மனைவி மற்றும் 5 வயது மகன் மாயமாகி விட்டதாகவும் புகார் கொடுக்க வந்துள்ளதாக போலீசாரிடம் சோகத்துடன் கூறினார்.
தொடர்ந்து தான் கையில் வைத்து இருந்த புகார் மனுவை போலீசாரிடம் வழங்கினார். அந்த புகார் மனுவை படித்த போலீசாருக்கு ஒரு நிமிடம் வடிவேலுவின் நகைச்சுவை சீன் கண் முன்னே வந்து போயுள்ளது. அதாவது, புகார் கொடுக்க வந்த இளைஞரிடம் விசாரித்த போது, தான் ஓட்டுநராக பணி செய்து வருவதாகவும், தனது 2-வது மனைவியும், 5 வயது மகனும் மாயமாகி விட்டதாக கூறினார்.
இதில் என்ன தலைசுற்றுவதற்கு இருக்கு.. 2 வது திருமணம் தானே என்று நினைத்த போதான், மாயமாகி போன பெண்ணுக்கு புகார் அளிக்க வந்த டிரைவர் 3-வது கணவராம். இதைக் கேட்டதும் சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு புகார் இருக்கிறதே என நினைத்துக் கொண்டு வழக்கையும் பதிவு செய்து விசாரணயை தொடங்கியிருக்கிறார்கள்.
டிரைவர் அளித்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணயை நடத்தி வருகிறார்கள். மருதமலை படத்தில், போலீஸ் ஏட்டாக இருக்கும் வடிவேலுவிடம் பதற்றத்துடன் ஒரு தம்பதி ஓடி வந்து தங்களை காப்பற்ற வேண்டும் என கோருவார்கள். அப்போது என்ன விஷயம் என்று வடிவேலு விசாரிக்க தொடங்குவார்...
அப்போது தீடிரென ஓடி வரும் இன்னொரு நபரை பார்த்து, இவர் தான் என் முதல் கணவர், இவர் எனக்கு முறைப்படி தாலிகட்டிய கணவர் என்று அந்த பெண் கூறுவார். அது போக இன்னும் இரண்டு பேர் இவர் தான் என் மனைவி என வந்து நிற்பார்கள். பின்னர் சீட்டு குலுக்கி போட்டு தீர்வு காண்பதாக வடிவேலு கூறுவார்... இந்த சினிமா காட்சியை அப்படியே கண்முன்னே வரவைக்கும் விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளதே என போலீசார் நினைத்துக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications