சேலத்திற்கு குட்நியூஸ்.. பிஃஎப் பணம்.. இ.பி.எப்.ஓ முக்கிய அறிவிப்பு.. நாளை மறுநாள் மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சேலம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) குறைதீர்க்கும் கூட்டங்கள் என்பது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான புகார்களைத் தீர்ப்பதற்காகவும், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் EPFO அமைப்பால் அவ்வப்போது கூட்டம் நடைபெறும். நிதி ஆப்கே நிகட் 2.0' என்ற பெயரில் ஒருங்கிணைந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் பலருக்கும் பிஎஃப் பிடிக்கப்படுகிறது. மாதம் மாதம் கணிசமான தொகை நிறுவனமும் வழங்க வேண்டும். இந்த பணத்தை அவசர தேவைக்காக எடுக்க முடியும். மேலும் வேலை இல்லாத சூழலில் முழு பணத்தையும் எடுக்க முடியும். இதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. அதேபோல் பிஃஎப் பணம் தொடர்பாக பல சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுபற்றிய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அவ்வப்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் முகாம் நடைபெறும்..

PF Money a grievance redressal meeting will be held on august 28th in Salem

அந்த முகாமில் முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறை விளக்கம், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் உடனான கலந்துரையாடல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள், முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியர்களுக்கு மின்னணு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தல், 'இ-நாமினேஷன்' தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.

சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ராகேஷ் எஸ்.சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் ஒன்றாக இணைந்து மாவட்ட வாரியாக 'நிதி ஆப்கே நிகட் 2.0' என்ற பெயரில் ஒருங்கிணைந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

அதன்படி சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே சாத்தப்பாடியில் உள்ள பாலமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஈரோடு மாவட்டம் சென்னிமலை அர்த்தநாரி பாளையம் பகுதியில் உள்ள சென்னிமலை இந்திய நெசவாளர் கூட்டுறவு நிறுவனத்திலும், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் உள்ள பரம்வீர் பாலிடெக்னிக் கல்லூரியிலும், நாமக்கல் மாவட்டம் செல்லப்பபட்டி அருகே உள்ள பொம்மைகுட்டைமேடு காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி பாரண்டப்பள்ளி மகாத்மா காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளியிலும் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்பிற்குட்பட்ட பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்பதால் அனைவரும் பங்கேற்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+