Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்திற்கு நல்ல செய்தி.. பிஃஎப் பணம்.. இ.பி.எப்.ஓ முக்கிய அறிவிப்பு.. 27ம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சேலம்: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் சேலம் உள்பட 5 மாவட்டங்களில் குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஜனவரி 27-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மண்டலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் நடைபெறுகிறது. இந்த முகாமில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓரளவு பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பிஎஃப் பிடிக்கப்படுகிறது. மாதம் மாதம் கணிசமான தொகை அதில் சேருகிறது. அதேபோல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ஓய்வூதியத்திற்கும் பணம் பிடிக்கப்படுகிறது. இந்த பணத்தை அவசர தேவைக்காக எடுக்க முடியும். மேலும் வேலை இல்லாத சூழலில் முழு பணத்தையும் எடுக்க முடியும். இதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. அதேபோல் பிஃஎப் பணம் தொடர்பாக பல சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுபற்றிய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அவ்வப்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் முகாம் நடைபெறும்..

salem pf money salary

அந்த முகாமில் முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறை விளக்கம், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் உடனான கலந்துரையாடல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள், முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியர்களுக்கு மின்னணு ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தல், 'இ-நாமினேஷன்' தாக்கல் செய்தல், ஒப்பந்ததாரர் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

இந்நிடிலையில் சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சந்தீப் சிங் நேகி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் வருகிற 27-ந் தேதி சேலம் உள்பட 5 மாவட்டங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் சேலம் அத்வைத ஆசிரம சாலையில் உள்ள ஸ்ரீ விநாயகா வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், நாமக்கல்லில் துறையூர் மெயின்ரோடு பொன்னேரியில் உள்ள அசோக் டெக்ஸ்டைல் மில்லிலும், தர்மபுரியில் பென்னாகரம் சாலையில் உள்ள வாரியார் மேல்நிலைப்பள்ளியிலும், கிருஷ்ணகிரியில் ஓசூர் சிப்காட் தொழில்துறை வளாகத்தில் உள்ள ஓசூர் தொழில்கள் சங்கத்திலும், ஈரோட்டில் தாமரைபாளையம் தாமரை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் இந்த குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், உறுப்பினர் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், இ.பி.எப். அட்வான்ஸ்கள் பற்றிய விழிப்புணர்வும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முதல் பாதி கூட்டமும், மதியம் 2 மணி முதல் மாலை 5.45 மணி வரை இரண்டாம் பாதி கூட்டமும் நடக்கிறது. இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்பிற்கு உட்பட்ட பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், முதன்மை முதலாளிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

வேலூர் மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் ரித்தேஷ் பக்வா வெளியிட்டிருந்த அறிவிப்பில், "வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் (நிதி ஆப்கே நிகட்-2.0) என்ற பெயரில் மாதந்தோறும் வருங்கால வைப்புநிதி குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான (ஜனவரி) வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் நிகழ்ச்சி பணியாளர்கள் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத்திட்டம் மற்றும் அதன் அம்சங்கள், தகுதி, கணக்கீடு, உரிமைகோரல் என்ற மையப்பெயரில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கே.வி.குப்பம் தாலுகா சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாராயணபுரம் கிராமத்தில் உள்ள ஆற்காடு மணிமார்க் புட்ஸ் வளாகம், திருப்பத்தூர் மாவட்டத்தில் வெங்கலாபுரத்தில் உள்ள டாக்டர் சந்திரலேகா மெட்ரிக் பள்ளி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய 4 இடங்களில் நடைபெறுகிறது.

இதில் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்: வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும்பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடக்கிறது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல், குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொது வினியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம்.

வேலூர் தாலுகாவில் சாத்துமதுரை, காட்பாடி தாலுகாவில் சேனூர், அணைக்கட்டு தாலுகாவில் அத்திக்குப்பம், குடியாத்தம் தாலுகாவில் எர்த்தாங்கல், கே.வி.குப்பம் தாலுகாவில் வடுகந்தாங்கல், பேரணாம்பட்டு தாலுகாவில் பெரியதாமல் செருவு ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்"இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+