அய்யோ.. அடுத்தடுத்து சடலங்கள்.. இறுக்கமாக கட்டிக்கொண்டு.. குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த இளம்பெண்
: 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்டார்
சேலம்: 2 குழந்தைகளை தன்னோடு இறுக்கி அணைத்து கயிறு கட்டி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் இளம் தாய் ஒருவர்..!
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ளது மோரூர் காட்டுவளவு என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் பிரபாகரன்.. 32 வயதாகிறது.. இவருடைய மனைவி பெயர் மரகதம்.. 30 வயதாகிறது.. இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உண்டு.
பிரபாகரன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். சொந்தமாக பிளாஸ்டிக் பை தயாரிக்கும் பெரிய ஃபேக்டரி வைத்து நடத்துகிறார்.. இங்கு உரம் பேக்கிங் செய்யும் 50 கிலோ பிளாஸ்டிக் பைகளை தயாரித்து, அதை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகிறார்.

பிசினஸ்
குடும்பத்துடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்தார்... இவரது உறவினர் ஒருவர், மோரூர் பகுதியில் தனியார் பஸ் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.. அந்த ஆபீசுக்கு பிரபாகரன் அடிக்கடி சென்று வருவாராம்.. அப்படி போகும்போதுதான், அந்த ஆபீசில் வேலை பார்த்து வரும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.. இது கள்ளக்காதலாக மாறி உள்ளது.. இருவரும் நிறைய இடங்களுக்கு ஜாலியாக சுற்றி வந்துள்ளதாக தெரிகிறது.

குழந்தைகள்
இந்த விஷயம் பிரபாகரனின் உறவினர் ஒருவருக்கு தெரிந்துவிட்டது.. அதனால், பிரபாகரனையும், அந்த பெண்ணையும் கூப்பிட்டு கண்டித்துள்ளார்.. ஆனால் 2 பேருமே அவர் பேச்சை கேட்கவில்லை.. அதனால் அந்த நபர் பிரபாகரனின் மனைவி மரகதத்திடம் சொன்னார்.. மரகதமும், கணவனை கண்டித்துள்ளார்.. 2 குழந்தைகள் இருப்பதால், கள்ளக்காதலை கைவிடுமாறு கெஞ்சி உள்ளார்.. பிரபாகரன் மனைவி பேச்சையும் காதில் போட்டுக்கவில்லை என தெரிகிறது.

தகராறு
ஒருகட்டத்தில் கள்ளக்காதலியின் வீட்டிற்கே சென்று தங்க ஆரம்பித்தார்.. இதனால் தம்பதி இடையே தகராறு அடிக்கடி நடந்து வந்துள்ளது.. இப்படித்தான் நேற்றுகூட தகராறு நடந்துள்ளது.. அவ்வளவு நேரம் மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு, மறுபடியும் நேற்றிரவு கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று தங்கினாராம் பிரபாகரன்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மரகதம் நொந்து போனார்.. தற்கொலை செய்து கொள்ளவும் முடிவெடுத்துள்ளார்..

கள்ளக்காதல்
தான் இறந்துவிட்டால், குழந்தைகளை கணவன் கவனிக்க மாட்டார் என்று நினைத்த மரகதம், குழந்தைகளையும் கொன்றுவிட முடிவு செய்தார். அதன்படி நேற்று நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த 2 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு, தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றார்.. மரகதத்துக்கு நீச்சல் தெரியுமாம்.. ஆனால், தான் பிழைத்து விடக் கூடாது என்பதற்காக 2 குழந்தைகளையும் தன்னுடன் இறுக்கமாக சேர்த்து பிடித்து கயிறு கட்டிக் கொண்டார்..

தோட்டம்
அந்த கயிற்றின் மறுமுனையை ஒரு கல்லில் கட்டிவிட்டார்.. இப்போது 3 பேரும் சேர்ந்து கிணற்றில் ஒன்றாக குதித்தனர்... இதில் 3 பேருமே தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை வழக்கம்போல் பிரபாகரன் வீட்டிற்கு வந்தார்.. அங்கு யாருமே இல்லை.. பிறகு தோட்டத்து பக்கம் தேடி வந்தார்.. அப்போதுதான், அடுத்தடுத்த பிணங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்... தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றறில் இருந்து ஒவ்வொரு உடலாக மீட்டனர்..

சடலங்கள்
ஆனால், அந்த கிணற 80 அடி ஆழமாம்.. அதனால் சடலங்களை ஒவ்வொன்றாக தேடி எடுப்பது கடினமாக இருந்திருக்கிறது.. பிறகு 3 பேரின் சடலத்தையும் மீட்ட போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இருப்பினும் இந்த 3 பேரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மரகதம் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications