பாமக தலைவர் ராமதாஸ் தான்.. கூட்டணி பற்றி முடிவு எடுக்கவும் அவருக்கே அதிகாரம்.. பொதுக்குழுவில் தீர்மானம்
சேலம்: சேலத்தில் இன்று நடந்த பாமக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பாமக கட்சியின் தலைவராக ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக கவுரவ தலைவராக ஜி கே மணியும், பொதுச்செயலராக முரளிசங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அன்புமணியின் பதவிக்காலம் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைந்ததாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமக பொதுக்குழு கூட்டம்
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் வலுத்துள்ளது. இரு தரப்பும் தங்கள் ஆதரவாளர்களை நீக்குவதும், சேர்ப்பதுமாக அதிரடி காட்டி வருகின்றனர். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவை அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராகவும், கட்சியின் சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவை அவருக்குத்தான் சொந்தம் என அங்கீகரித்ததாக சொல்லப்படுகிறது.
அதேநேரத்தில் பொய்யான தகவல்களை கொடுத்து இருப்பதாக அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு பொதுக்குழு சேலத்தில் இன்று நடைபெறும் என ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.
ராமதாசுக்கே அதிகாரம்
இந்த நிலையில் இன்று பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த அடையாள அட்டை பாஸ் வழங்கப்பட்ட நிர்வாகிகள் 4700 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் பாமக கட்சியின் தலைவராக ராமதாஸை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக கவுரவ தலைவராக ஜி கே மணியும், பொதுச்செயலராக முரளிசங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அன்புமணியின் பதவிக்காலம் மே 28 ஆம் தேதியுடன் முடிவடைந்ததாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாருடன் கூட்டணி என அறிவிப்பாரா?
இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. எந்த கட்சியுடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது மட்டும் இன்றி பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் அரசியல் சம்பந்தமான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் தெரிகிறது.
பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தையொட்டி சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர்.
திமுக, அதிமுக, தவெக
வரும் தேர்தலில் பாமக தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் சாயுமா? அல்லது தவெக, திமுக பக்கம் சாயுமா? என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் கிளம்பி வரும் நிலையில், கூட்டணி தொடர்பாக ராமதாஸ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்று சொல்லப்படுவதால், ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டாக்டர் ராமதாஸ் நேற்றே சேலம் வந்தார். பின்னர் அவர் சூரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கினார். ராமதாசிடம் பொதுக்குழுவில் என்ன மாதிரியான அறிவிப்பு வரும் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அன்புமணி தரப்பு
இதற்கு பதில் அளித்த ராமதாஸ், 'பொதுக்குழுவில் சொல்ல வேண்டியதை இன்று சொல்லிவிட்டால் உப்பு சப்பில்லாமல் போய்விடும். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்ய செயற்குழு, பொதுக்குழு எனக்கு அதிகாரம் தரும்' என்று கூறினார்.
ராமதாஸ் தரப்பு நடத்தும் பொதுக்குழு தங்களை கட்டுப்படுத்தாது எனவும், இது செல்லத்தக்கது அல்ல என தேர்தல் ஆணையத்தை நாட இருப்பதாக அன்புமணி தரப்பு கூறி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு இடையேதான் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழு இன்று சேலத்தில் நடைபெற உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications