வாழப்பாடியில் கேட்ட வினோத சத்தம்.. அலறி அடித்து தெருவுக்கு வந்த பொதுமக்கள்.. என்ன நடந்தது?
சேலம் அருகே லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்
சேலம்: சேலம் அருகே திடீரென பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பயத்தில் ஓடிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது நீர்முள்ளிக்குட்டை என்ற பகுதி.. இங்கு நேற்று மாலை திடீரென பெரும் சத்தம் கேட்டுள்ளது..
இந்த பகுதியில் இருக்கும் கடைகள், வீடுகளில் இருந்த கண்ணாடிகளில் ஒருவித அதிர்வு பிரதிபலித்துள்ளது. இதனால் நில அதிர்வு ஏற்பட்டதாக நினைத்து, மக்கள் வீட்டை விட்டு வெளியே அலறி அடித்து ஓடி வந்துள்ளனர்...

அதிர்வு
லேசான நில அதிர்வு ஏற்பட்டதோடு வீடுகளும், லேசாக குலுங்கியதாக தெரிகிறது. வீடுகளுக்குள் திடீரென சத்தம் பயங்கரமாக இருந்ததாக ஒருவருக்கொருவர் அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். இதையடுத்து, உடனடியாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.. அதிகாரிகளும் விரைந்து வந்து இது சம்பந்தமான ஆய்வு மேற்கொண்டனர்.

விசாரணை
பிறகு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய கருவிகளை சோதனையிட்டபோது, அப்படியான நில அதிர்வு எங்கும் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.இதையடுத்து, அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. அந்த காட்சிகளிலும் நில அதிர்வு போன்ற அறிகுறி எதுவும் தென்படவில்லை என்பது உறுதியானது.. ஆனால், சிசிடிவி கேமராவிலும் லேசான சத்தம் கேட்டதாக தெரியவந்துள்ளது..

சமாதானம்
இதற்கு பிறகுதான், அந்த வழியாக இரண்டு ஜெட் விமானங்கள் பெரும் சப்தத்துடன் பறந்துள்ளது என்றும், அதன் காரணமாகவே இந்த அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... இதனை அடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அப்பகுதி மக்கள் பீதி அடைந்திருப்பதோடு, அதிகாரிகள் நில அதிர்வு குறித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விநோத சத்தம்
இதனால் சேலம் மாநகரத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெட் விமானங்கள் எத்தனையோ முறை அந்த பகுதிகளில் பறந்து சென்று வந்திருக்கின்றன என்றாலும், இப்படி ஒரு சத்தம் என்றைக்குமே தங்களுக்கு கேட்டதில்லை என்றும், இது ஏதோ வினோதமான சத்தமாக இருந்ததாகவும் பதட்டம் விலகாமல் சொல்கின்றனர் அந்த பகுதி மக்கள்.. தொடர் விசாரணை நடந்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications