காலாண்டு தேர்வு விடுமுறை.. சொந்த ஊர் செல்ல நல்ல வாய்ப்பு.. கோவை -சென்னை இடையே சிறப்பு ரயில்
சேலம்: ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில் பயணிகள் பயன்பெறும் வகையில் கோவையில் இருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.30க்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை வரும் சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. ஆயுதபூஜை பண்டிகை வரும் அக்டோபர் 1ம் தேதி வருகிறது. எனவே வரும் 27ம் தேதி முதல் தொடர் விடுமுறை வருவதால் பலரும் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக வரும் ஞாயிறு அன்று சென்னை கோவை இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் முறையே கோவை டூ சென்னை, சென்னை டூ கோவை செல்கிறது. வரும் 28ம் தேதி தொடங்கி அக்டோபர் 12ம் தேதி வரை இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

எனவே கோவையில் இருந்து சென்னை வருபவர்கள், சென்னையில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் செல்பவர்களுக்கு இந்த ரயில்கள் பயனுள்ளதாக இருக்கும். இதுபற்றி ரயில்வே வெளியிட்ட அறிவிப்பினை பார்ப்போம். ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில் பயணிகள் பயன்பெறும் வகையில் கோவையில் இருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
கோவை-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் (06034) வருகிற 28-ந் தேதி முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் கோவையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு வழியாக நள்ளிரவு 2.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 2.20 மணிக்கு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்டிரல் ரயில் நிலையம் சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-கோவை வாராந்திர சிறப்பு ரயில் (06033) வருகிற 29-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக பிற்பகல் 2.50 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 3 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக மாலை 6.35 மணிக்கு கோவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட மக்கள் காலாண்டு விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications