மாம்பழம் சின்னத்தில் போட்டி.. எல்லாரும் தைலாபுரம் வாங்க..அன்புமணி ஆதரவாளர்களுக்கு கொக்கி போட்ட அருள்
சேலம்: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவி வருகிறது. பாமக தங்களுக்குத்தான் என்று இருவரும் மாறி மாறி உரிமை கொண்டாடி வருகின்றனர். அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு டெல்லி காவல்துறையில் புகார் அளித்தனர். இதனிடையே அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து ராமதாஸ் ஆதரவாளர் அருள், நாங்கள் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவோம். பிரிந்து சென்றவர்கள் தைலாபுரம் வரலாம் என்று கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. மற்ற அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வியூகங்களில் பரபரப்பாக உள்ளனர். பாமகவில் தந்தை மகன் பனிப்போர் வெடித்து கொண்டிருக்கிறது. ராமதாஸ், அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவுகிறது. இதன் காரணமாக பாமகவில் பிளவு ஏற்பட்டு, ராமதாஸ், அன்புமணி தனித்தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.

நீதிமன்றம் அதிரடி
பாமக எங்களுடையது. மாம்பழம் சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார். தேர்தல் ஆணையமும் அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்தது. இதற்கு ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக ராமதாஸ் சார்பில் ஏற்கனவே டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உரிமையியல் நீதிமன்றம் சென்று முறையிடுங்கள் என்று கூறியிருந்தனர்
டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்று பாமக கௌரவ தலைவராக உள்ள ஜி.கே மணி புகார் அளித்துள்ளார். அதேபோல டெல்லி நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. அதில் அன்புமணியை தலைவராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் கிடையாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இது ராமதாஸ் தரப்புக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணி தலைவர் இல்லை
இதுகுறித்து பாமக எம்எல்ஏவும், ராமதாஸின் ஆதரவாளருமான அருள் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் நீதி சாகவில்லை என்பதற்கு உன்னதமான ஒரு தீர்ப்பு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் வழங்கிய கடிதம் செல்லாது, தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. அதனால் அன்புமணி தலைவர் என அங்கீகரித்தது செல்லாது. அதை எதிர்த்து நாங்கள் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
அதில்தான் இப்படி தீர்ப்பு வந்துள்ளது. அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. பாமக குறித்து பாலு தவறான தகவல்களை கூறுகிறார். நீதிமன்றம் ஒன்று கூறினால், பாலு ஒன்று கூறுகிறார். அவர் ஆணவத்தின் உச்சத்தில்இருக்கிறார். 2022 ஆம் ஆண்டு அன்புமணி பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை வழங்கியுள்ளார். வரும் தேர்தலில் நாங்கள் மாம்பலம் சின்னத்தில் போட்டியிடுவோம்.
தைலாபுரம் வாங்க
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். இறுதியில் தர்மமே வெல்லும். தர்மம் வென்றுள்ளது. எங்கள் ஐயாவின் 46 வருடம் உண்மையான உழைப்பு வென்றுள்ளது. அவரிடம் 10 சதவீத வாக்கு உள்ளது. இந்தமுறையும் தைலாபுரத்தில் தான் கூட்டணி முடிவு செய்யப்படும். பாமக நாங்கள் தான், நிறுவனர் ஐயா தான் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. பிரிந்து சென்றவர்களை ஏற்று கொள்ள ஐயா தயாராக உள்ளார். பிரிந்தவர்கள் தயவு செய்து தைலாபுரம் வாங்கள்.
அங்கு எம்எல்ஏக்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. நண்பர்களிடம் போன் செய்து அவமானப்படுகிறோம் என்று கதறி அழுகிறார்கள். மேடையில் ஓரமாக அமர வைக்கிறார்கள். என்னை கொலை செய்ய அனுப்பியவர்களிடம் நான் பேச மாட்டேன். ஐயா யாரையும் அடிக்கவோ, கொலை செய்யவோ சொல்ல மாட்டார். பிரிந்து சென்றவர்களுக்கு இங்கு உரிய மரியாதை கிடைக்கும்." என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications