எல்லாம் அந்த ஆலமரத்து பொந்திலேதான் இருக்கு.. பரபரக்க வைத்த சேலம் என்கவுண்டர்.. உயிர்விட்ட கதிர்வேல்
சேலம் ரவுடி என்கவுண்டர் செய்யப்பட என்ன காரணம், பின்னணி என்ன?
Recommended Video
சேலம்: போலீஸ் கஸ்டடியில் ஜீப்பில் சென்றுகொண்டிருந்த ரவுடி கதிர்வேலுக்கு திடீரென கத்தி எங்கே இருந்து கிடைத்தது? ரவுடி போலீசை தாக்கியதும், போலீசார் ரவுடியை என்கவுண்டர் செய்ததும் என டக் டக்கென கொஞ்ச நேரத்திலேயே நடந்துமுடிய காரணம்.. எல்லாம் அந்த ஆலமரத்து பொந்திலேதான் விஷயம் அடங்கி உள்ளது!
நேற்று கதிர்வேலு என்ற ரவுடியை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர். சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி அருகே உள்ள தாதனூரைச் சேர்ந்தவர்தான் கதிர்வேல். வயசு 28. பக்கா கிரிமினல்.. 3 கொலை கேஸ், 9 செயின் அறுத்த கேஸ் என ஏகப்பட்ட வழக்குகள் ஸ்டேஷனில் உள்ளது.
இவருக்கு காட்டூர் ஆனந்தன் என்பவர் நெருக்கம், இவர் ஒரு திமுக பிரமுகர் என்று சொல்லப்படுகிறது. இவருடன் சேர்ந்துதான் நிறைய கிரைம்களை செய்து வந்திருக்கிறார்.

முறுக்கு வியாபாரி
போனமாசம் 5ம் தேதி, வலசையூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் என்பவரை குத்தி கொலை செய்துள்ளனர் இவர்கள். ஆனால் கொலை செய்தது தாங்கள்தான் என்று தெரியாமல் இருக்க, இறந்த பிறகு விபத்தில் இறந்ததுபோல் நடுரோட்டில் பிணத்தை போட்டு சென்றுவிட்டனர்.

கதிர்வேலு
ஆனாலும் போலீசார் மோப்பம் பிடித்து குற்றவாளிகளை தேடி வந்தனர். அப்படித்தான் கதிர்வேலுவை மே 1-ம் தேதி அதாவது நேற்று முன்தினம் கைது செய்தனர். அப்போது விசாரணையில், முறுக்கு வியாபாரி கணேசனை எப்படி, ஏன் கொன்றோம் என்று வாக்குமூலம் தந்தார்.

ஆலமரத்து பொந்து
அதில்,"நாங்க பண்ற திருட்டு, வழிப்பறிகளில் கணேசனுக்கும் பங்கு உண்டு. கிடைத்த பணம், நகைகளை பங்கு போடும்போது எங்களுக்குள்ள சண்டை வந்தது. அதனாலதான் கணேசனை கத்தியால் கொலை பண்ணிட்டு, நடுரோட்டில் போட்டுட்டு போய்ட்டோம். அந்த கத்தி மற்றும் கொலை செய்ய பயன்படுத்தின ஆயுதங்களை எல்லாம் ஒரு ஆலமரத்து பொந்திலதான் வெச்சிருக்கோம்" என்றார்.

தாக்கினர்
உடனே போலீசாரும், குள்ளம்பட்டிக்கு சென்று அந்த ஆலமரத்து பொந்தில் இருந்த ஆயுதங்களை பார்த்தனர். சொன்னமாதிரியே எல்லாம் இருந்தன. அப்போதுதான் அதில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு கதிர்வேலு போலீசாரை தாக்க முயன்றுள்ளார்.

என்கவுண்டர்
இதில் போலீசாருக்கு மார்பு, கை என பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கையில் கத்தி, தப்பி ஓடிவிடவும் வாய்ப்பு நிறைய இருந்ததால்தான் போலீசார் கதிர்வேலுவை என்கவுண்டர் பண்ண வேண்டியதாக சொல்கிறார்கள். காயமடைந்த 2 போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications