சேலத்தில் நெரிசலை குறைக்க பிரமாண்ட 2 அடுக்கு மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடியார்!
Recommended Video
சேலம்: சேலத்தில் புதிதாக கட்டப்பட்ட பிரமாண்டமான 2 அடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.
ஸ்டீல் சிட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் தொழிற்துறையில் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அம்மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகள் கடந்த 3 ஆண்டுகளாக அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.
இந்நிலையில் சேலத்தில் ரூ.320 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு பாலம் பணிகளில், நிறைவுபெற்ற பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

ரூ.320 கோடி செலவில்
கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இந்த இரண்டு அடுக்கு மேம்பாலம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 320 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன.

கட்டுமான பணிகள் நிறைவு
இந்த மேம்பால கட்டுமான பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் முதல்கட்டமாக ராமகிருஷ்ணா சாலை முதல் அழகாபுரம் காவல் நிலையம், ஏவிஆர் ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலான கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன.

2 அடுக்கு மேம்பாலம் திறப்பு
இதைத்தொடர்ந்து இன்று காலை இரண்டு அடுக்கு மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைத்தார். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என சேலம் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் நீண்ட மேம்பாலம்
சேலம் 5 சாலையிலிருந்து 6.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்கு புறமும் செல்லும் இந்த 2 அடுக்கு பாலத்தை தாங்கி பிடிக்க 173 பிரமாண்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாலம் தமிழகத்தின் மிக நீண்ட இரண்டடுக்கு மேம்பாலம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications