சேலம் எடப்பாடியில் 9ம் வகுப்பு மாணவியும், தனியார் நிதி நிறுவன ஊழியரும்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று இந்த மாணவியின் பெற்றோர் விவசாய வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் வீட்டிற்குள் புகுந்தார். அப்போது இளைஞர் செய்த காரியம் அவரை சிறையில் தள்ளியிருக்கிறது. அதேநேரம் யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் சிறுமிக்கு நடந்துள்ளது. சிறுமிகள் அறிய வேண்டிய அந்த செய்தியை பார்ப்போம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ளஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று இந்த மாணவியின் பெற்றோர் விவசாய வேலைக்கு சென்று விட்டார்கள். இந்நிலையில் மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை கூச்சலிட்ட சிறுமியின் குரல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் புகுந்து அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தவறான முடிவு
இந்த சம்பவத்தால் ஊரே ஒன்று கூடியது. ஊரில் உள்ள அனைவருக்கும் நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதனால் அவமானம் எனறு தவறாக நினைத்த அந்த மாணவி வீட்டில் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இதனால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தேவூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அந்த இளைஞரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரேதப் பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் தரப்பில் தேவூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே மாணவியிடம் வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டாரா? அல்லது அத்துமீறலில் ஈடுபட்டாரா? என்பது தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.
இளைஞர் சதீஷ் கைது
பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ் (வயது 32) என்பதும், இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளதும் தெரியவந்தது. மேலும் சதீஷ் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரிடம் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதில் மாணவி அவமானம் என தவறுலாக நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டது பெரிய தவறு ஆகும். இப்படியான சூழலை யாரேனும் எதிர்கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பைத பார்ப்போம்.
சட்டம் உங்கள் பக்கம்
இது போன்ற சூழலில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயப்படத் தேவையில்லை என்பதற்கு இந்தியச் சட்டம் போக்சோ என்ற மிக வலிமையான ஆயுதம் இருக்கிறது. பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், புகைப்படம் அல்லது அடையாளம் எக்காரணம் கொண்டும் ஊடகங்களிலோ அல்லது பொது வெளியிலோ கசியக் கூடாது என்பது சட்ட விதி. மீறினால் கடும் தண்டனை உண்டு. அதனால் வெளியிட வாய்ப்பே இல்லை.. வாக்குமூலம் வாங்கும்போது போலீசார் சீருடையில் வரமாட்டார்கள். குழந்தைக்குப் பயமில்லாத சூழலில்தான் விசாரணை நடக்கும். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு பிணை கிடைப்பது மிகக் கடினம். ஆயுள் தண்டனை கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
பெற்றோருக்கான விழிப்புணர்வு
குழந்தைகள் இதுபோன்ற இக்கட்டான சூழலில் தற்கொலை முடிவை எடுப்பதற்குக் காரணம் "சமூகம் என்ன சொல்லுமோ?" அல்லது "பெற்றோர் நம்மைக் கண்டிப்பார்களோ?" என்ற பயம்தான். அப்போது "என்ன நடந்தாலும் நாங்கள் உன்னோடு இருக்கிறோம்" என்ற ஒற்றை வார்த்தை ஒரு உயிரைக் காப்பாற்றும். தவறு செய்தது அந்த நபர் தான், குழந்தை அல்ல. அந்தத் தவறுக்காகக் குழந்தை தண்டனை (தற்கொலை) அனுபவிக்கத் தேவையில்லை என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
உதவிக்கு அழைக்க வேண்டிய எண்கள்
பாதிப்பு ஏற்படும்போது அல்லது ஆபத்தை உணரும்போது தயங்காமல் இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:
1098: குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு 24 மணிநேரமும் உதவும் எண்.
14417: தமிழக அரசின் கல்வி வழிகாட்டி மற்றும் மனநல ஆலோசனை எண்.
100 / 112: அவசரக் காவல் உதவி.
முக்கிய அறிவிப்பு: எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது.. தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications