சேலத்தில்.. அசிங்கமா சிக்கிட்டாங்க.. "3ம் நம்பர்" வெச்ச ஆப்பு.. பாஜக தலைவர் மனைவியால் மிரண்ட ஓமலூர்

Subscribe to Oneindia Tamil

சேலம்: போலீசாரின் பிடியில் சிக்கியிருக்கிறார் ஒரு பெண்.. இதனால் சேலம் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருகாலத்தில் தமிழகத்தில் கொடிகட்டி பறந்தது லாட்டரி சீட்டு விற்பனை.. வறுமையில் இருப்பவர்களையும், ஓவர்நைட்டில் பணக்காரர்களாக்கியது அந்த லாட்டரி சீட்டுகள். ஆனால், இந்த லாட்டரியால் நடுத்தெருவுக்கு வந்தவர்கள் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள்.. கடன் தொல்லையால் உயிரையும் மாய்த்து கொண்டனர் நூற்றுக்கணக்கான அப்பாவிகள்..

Salem BJP District President and Do you know who is this 3 Number Lottery woman Manonmani

லாட்டரி: இதற்கு பிறகுதான் லாட்டரிக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், "3ம் நம்பர்" என்ற 3 இலக்க எண்களை கொண்ட ஆன்லைன் வழி லாட்டரி அறிமுகமானது. இது அச்சிட்ட லாட்டரி கிடையாது.. லாட்டரி வாங்கியதை போலவே, எண்களை கொண்டு நடைபெறும் விற்பனை முறை இதுவாகும்.. அதாவது பழைய முறையில் லாட்டரி சீட்டை வாங்கினால், பரிசு விழுந்த எண்ணுக்குரிய சீட்டை காண்பித்து பரிசுத் தொகையை பெறலாம்.

ஆனால், இந்த முறை 3 நம்பர் லாட்டரி முறையானது, முற்றிலும் கற்பனையானது.. லாட்டரி சீட்டை விற்பனை செய்வது போலவும், அதை வாடிக்கையாளர்கள் வாங்கு போலவும் இருக்குமே தவிர, எதிர்பார்த்த பலனை தராது.

3 நம்பர் லாட்டரி: அரசால் தடை செய்யப்பட்ட 3-ம் நம்பர் லாட்டரி மறைமுகமாக விற்பனையாகி வருவதும், அதில் பணத்தை இழந்து குடும்பங்கள் சீரழிந்து வருவதும் தொடர் கதையாகிவிட்டது. கடந்த வாரம்கூட புதுச்சேரியில் 3 நம்பர் லாட்டரி விற்ற நபர்கள் கைதாகி உள்ளார்கள்.

இதோ, சேலத்தில் ஒரு பெண் இந்த பிசினஸில் இறங்கியிருக்கிறார்.. ஓமலூரில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்திருக்கிறார்.. இவர் பாஜக மாவட்ட தலைவரின் மனைவியாம்.. இந்த பாஜக மாவட்ட தலைவர், முன்னாள் எம்எல்ஏ என்பது அதைவிட அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

விற்பனை அதிகரிப்பு: சேலம் மாவட்டம் ஓமலூர் நகர் மற்றும் வட்டார கிராமங்களில் ஒரு நம்பர், மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்த லாட்டரியால், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார்களும் எழுந்தன.. எனவே, ஓமலூர் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரமாக்கினார்கள்.. அப்போது, ஓமலூர் அருகே புளியம்பட்டி பகுதியில், ஒரு பெண் செல்போன் போன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதை கையும் களவுமாக போலீசார் கண்டுபிடித்தனர்.

அவரிடமிருந்து செல்போன், பணம் போன்றவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன.. அந்த பெண்ணை ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணையும் நடத்தினார்கள்.

மனோன்மணி: அப்போதுதான் அவரது பெயர் மனோன்மணி என்பது தெரியவந்தது.. இவருக்கு 50 வயதாகிறது.. தர்மபுரி தொகுதி முன்னாள் எம்எல்ஏ பாஸ்கரின் மனைவியாவார்.. ஆனால், பாஸ்கரிடமிருந்து இவர் தனியாக பிரிந்து சென்றுவிட்டாராம்.. கணவரை பிரிந்து 10 வருடமாகிறதாம்.. ஓமலூர் புளியம்பட்டியில், தன்னுடைய அம்மா வீட்டில் வசித்து வருகிறார்..

இந்த 5 வருடங்களாகவே, மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறாராம் மனோன்மணி.. இதையடுத்து, போலீசார் மனோன்மணியை கைது செய்தனர்... உடனே ஜாமீனிலும் விட்டுவிட்டனர்.. ஆனால், இனிமேல் லாட்டரி விற்பனை செய்யக்கூடாது என்று போலீசார் அவருக்கு வார்னிங் தந்திருக்கிறார்கள்.

பாஸ்கரை பொறுத்தவரை, இப்போதைக்கு பாஜகவின் தர்மபுரி மாவட்ட தலைவராக இருப்பதாக தெரிகிறது.. ஆனால், இவர், ஆரம்பத்தில் தேமுதிகவில் இருந்தவர்.. அந்த கட்சி சார்பாக போட்டியிட்டுதான், எம்எல்ஏவாக பணியாற்றினார்.

விஜயகாந்த்: அதுமட்டுமல்ல, அந்த நேரத்தில், கட்சியின் தலைவர் விஜயகாந்த் இவருக்காகவே, கிளம்பி வந்து பிரச்சாரம் செய்திருக்கிறார்.. அப்போதுதான், ஒருமுறை திறந்த வேனிலேயே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, பொதுமக்கள் முன்னிலையிலேயே கன்னத்தில் விஜயகாந்த் "பளார்" அறை விட்ட சம்பவம் நடந்து, தமிழகத்தையே களேபரமாக்கிவிட்டது.

பிறகு தேமுதிகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய நிலையில், மாவட்ட தலைவராக இன்று உயர்ந்துள்ளார் பாஸ்கர்.. இவரது மனைவி லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் கைதாகியிருப்பது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை பிரிந்துவிட்ட நிலையிலும், இந்த விவகாரத்தில் கொஞ்சம்கூட சம்பந்தமேயில்லாமல், மாஜி எம்எல்ஏவின் தலையை சிலர் உருட்டி கொண்டிருக்கிறார்களாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+