2 ஆண்டு ஆட்சி.. அரசுப் பள்ளிகளில் நடந்த புரட்சி.. சேலம் ஒரு சாட்சி..
சேலம்: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைப் பற்றி நாளிதழ் ஒன்று வெளியிட்ட முதல் பக்க செய்தி, தமிழ்நாடு முழுதும் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலின் அதற்கு மிகக் கடுமையான கண்டனத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அரசியல் கட்சி சார்பற்று பலரும் அந்தத் திட்டத்தை வரவேற்று வாழ்த்தி வரும் போது இப்படி ஒரு எதிர்மறையான செய்தி, வெளியானது. ஆனால், இதற்கு மாறாக அடுத்த சில நாள்களில் தெலங்கானா அதிகாரிகள் குழு 'காலை உணவுத் திட்டம்' குறித்து ஆராய, தமிழ்நாட்டுக்கு வந்திருந்தது.

மாநிலம் தாண்டி பாராட்டுப் பெற்ற இந்தத் திட்டத்தால், பல தரப்பு மாணவர்கள் மட்டுமல்ல; பல தரப்பு பெற்றோர்களுக்கும் பலனடைந்துள்ளனர். 17 லட்சம் பிள்ளைகளுக்குக் காலை உணவு வாங்கும் அளவுக்கு இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் விரிவாக்கம் செய்துள்ளார்.
இந்த 2 ஆண்டுகால ஆட்சியில் அரசுப் பள்ளிகள் எந்தளவுக்கு முன்னேறி உள்ளன என்பதற்கு சரியான சாட்சி சேலம் மாவட்டத்தில் உள்ள இந்தப் பெரியசீரகாபாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி.

வீரபாண்டி ஒன்றியக் கழக செயலாளர் வெண்ணிலா சேகர், "எங்கள் வீரபாண்டி ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 64 பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இந்த ஒட்டுமொத்த பள்ளிகளில் இந்த பெரியசீரகாபாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி கொஞ்சம் சிறப்பானது. ஏனென்றால், திராவிட மாடல் ஆட்சியில் இந்தப் பள்ளியில் உள்ள 7 வகுப்பறைகளும் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளன.

ஆகவே இந்த 2 ஆண்டு காலத்தில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. குறிப்பாகக் காலை உணவுத்திட்டம் வழங்கப்பட்ட பிறகு வருகைப் பதிவு அதிகரித்துள்ளது. மாணவர்களும் காலையில் உற்சாகமாக உணவை உட்கொண்டுவிட்டு பாடத்தில் கவனம் செலுத்திப் படித்து வருகின்றன" என்கிறார்.

வீரபாண்டி ஒன்றியம் வட்டார கல்வி அலுவலர் அன்பழகன், "இந்த ஆட்சி வந்த பிறகு அனைத்து பள்ளிகளுக்குமான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தந்துள்ளார்கள். அத்துடன் மாணவர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள்கூட புதியதாக வழங்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சியுடன் தற்காப்புக் கலை பயிற்சியும் வழங்கி வருகிறோம்.

எஸ்சி மற்றும் எஸ்டி பிள்ளைகள். அதைப்போல் எம்பிசி, சிறுபான்மை பிள்ளைகள் அனைவருக்கும் அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதைப் பலரும் அறிவர். ஆனால், விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் 12 ஆம் வகுப்புவரைப் படிக்க அவர்களின் பெயரில் வங்கி வைப்புத் தொகையாக அரசு ரூ 75 ஆயிரம் செலுத்துகிறது.
இதனால், பள்ளிப்படிப்பு தடை இல்லாமல் படிக்க அரசு வழி செய்து தந்துள்ளது. இந்தச் சலுகைகள் எல்லாம் வேறு மாநிலங்களில் இல்லாதவை இந்த மாற்றங்களால் அரசுப் பள்ளியை நோக்கி பொதுமக்களின் கவனம் திரும்பி உள்ளது" என்கிறார்.

"எங்களது பள்ளியை 'கனவுப் பள்ளி' திட்டத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர். அதன் மூலம் வகுப்பறைகள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் சைக்கிள் ஸ்டாண்ட் ஒன்று கட்டித்தந்துள்ளனர். அதன் பின் ஒரு புதிய கழிப்பறை மற்றும் ஒரு சத்துணவுக் கட்டமும் கட்டித் தந்துள்ளனர்.
இதனால் இந்தப் பள்ளியைப் பார்க்கவே உற்சாகம் ஏற்படுகிறது. தூய்மையான வகுப்பறைகளால் மாணவர்கள் மிகுந்த சந்தோஷம் அடைந்துள்ளனர்" என்கிறார் இப்பள்ளியின் தலைமையாசிரியர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் அத்தனூர்பட்டி ஒன்றிய தலைவர், "எங்கள் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேலான மக்கள் வாழ்கிறார்கள். இளைஞர்களே ஆயிரத்திற்கு மேல் இருப்பார்கள். ஆனால், இதுவரை இந்த இளைஞர்கள் விளையாட என்று ஒரு விளையாட்டு மைதானம் என்பதே இல்லை. அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.
அந்தக் கோரிக்கையை ஏற்று ஒன்றரை ஏக்கருக்கு மேலான நிலத்தை அரசு ஒதுக்கி ஒரு மைதானத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. அதில் ஃபுட் பால், வாலி பால், கூடைப்பந்து எனத் தனித்தனி மைதானம் அமைத்துத் தரப்பட்டுள்ளது. கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக வலையுடன் கூடிய மைதானமும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

இந்தக் கிராமத்தில் மட்டும் அல்ல, கிட்டத்தட்ட 385 கிராம ஊராட்சிகளில் விளையாட்டு மைதானங்கள் இந்த ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தனை மாற்றங்களும் இந்த 2 ஆண்டு ஆட்சிக் காலத்தில் நடந்தவை என்பது மிகைப்படுத்த முடியாத உண்மைகள்.

-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications