பீரோ, கட்டிலுடன் வெளியேறிய பவானி மக்கள்.. சேலம் மேட்டூர் அணையிலிருந்து 1.25 லட்சம் கனஅடி நீர்திறப்பு
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.. இதையடுத்து, உபரி நீர் சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய மேட்டூர் அணையில், முழுகொள்ளவு எட்டப்பட்டிருக்கிறது.. எனவே, அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.'

நீர் வெளியேற்றம்: அப்படி வெளியேற்றப்படும் நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேமித்து பயன்படுத்த வேண்டும் என ரூ.673 கோடி செலவில் முதல்கட்டமாக 100 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடந்து முடிந்து, இப்போதைக்கு மொத்தம் 56 ஏரிகள் தயார் நிலையில் இருக்கின்றன.
பின்னர், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உபரி நீரை ஏரிகளில் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.. அதன்படியே, இன்று காலை 7 மணியளவில் திப்பம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பிரிந்தா தேவி, சேலம் எம்எல்ஏ ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் முன்னிலையில், திப்பம்பட்டியில் உள்ள நீரேற்றும் நிலையம் மூலம் இந்த தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தண்ணீர் திறப்பு: முதற்கட்டமாக எம்.காளிபட்டியில் உள்ள ஏரியில் நீர் நிரம்பி அதன் பின்னர் படிப்படியாக 56 ஏரிகளுக்கும் இந்த தண்ணீர் செல்லவுள்ளது. இந்த திட்டத்தின் காரணமாக எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர் ஆகிய பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் பலன் பெறுவார்கள்.. இன்று காலை 7 மணி முதல் 1 லட்சம் கன அடியும், பிறகு 8 மணி முதல் 1.25 லட்சம் கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது..
இதனிடையே, கரையோர பகுதி மக்களுக்கு ஏற்கனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பல குடும்பத்தினா் கரையோர வீடுகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேறி சென்றுவிட்டனர். எனினும் ஒருசிலர் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்தார்கள்.. இப்போது அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீா்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது.
வெளியேற்றம்: இதையடுத்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டதால், பவானியில் காவிரி கரையோரத்தில் வசிக்கும் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உடைமைகளுடன் நேற்றிரவு இரவு பாதுகாப்பான, மேடான பகுதிகளுக்கு வெளியேறி சென்றார்கள்..
பீரோ, கட்டில், டிவி மற்றும் உடைமைகளை நண்பா்கள், உறவினா்கள் உதவியுடன் பாதுகாப்பான பகுதிக்கு எடுத்து சென்றார்கள்.. இதனால் கரையோர பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன. கரையோர பகுதிகளை சோ்ந்த மக்கள் பவானி நகராட்சி, பசுவேஸ்வரா் தெரு தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.. அதேபோல, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளிலும் கரையோர மக்கள் உடைமைகளுடன் வெளியேற்றப்பட்டு, மேடான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
பாதுகாப்பு: மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், வருவாய், நகராட்சி மற்றும் போலீசார் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே, மேட்டூரில் உபரி நீரை ஏரிகளில் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.. அதன்படியே, இன்று காலை 7 மணியளவில் திப்பம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பிரிந்தா தேவி, சேலம் எம்எல்ஏ ராஜேந்திரன், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் முன்னிலையில், திப்பம்பட்டியில் உள்ள நீரேற்றும் நிலையம் மூலம் இந்த தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications