சேலத்தில் ஆட்டு வியாபாரிக்கு தைரியம்.. குடும்பத்தை ஊருக்கு அனுப்பி? அந்த சின்னப்பொண்ணுக்கு என்னாச்சு
சேலம்: சேலம் சின்னப்பொண்ணு நிலைமை பரிதாபத்தில் முடிந்துள்ளது.. வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்று போலீசார துரிதமாக விசாரணையை முன்னெடுத்தையடுத்து குற்றவாளி சிக்கியிருக்கிறார். இன்று சின்ன பொண்ணுக்கு போஸ்ட் மார்ட்டம் நடக்க போகிறது. இதன்பிறகே மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனன நடந்தது சேலம் சின்னப்பொண்ணுவுக்கு?
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் அமைந்துள்ளது குரும்பப்பட்டி ஊராட்சி.. இங்கு காளிகவுண்டன் வளவு பகுதியை சேர்ந்தவர் மாதையன்.. இவருக்கு 50 வயதாகிறது.. ஆட்டு வியாபாரம் செய்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் சின்னப்பொண்ணு.. 46 வயதாகிறது.. இவர்களுக்கு 29 வயதில் விக்னேஷ் என்ற மகனும், 25 வயதில் ஜமுனா என்ற மகளும் உள்ளனர்.

ஆட்டு வியாபாரி
இந்நிலையில் சம்பவத்தன்று, கோகுலப்பிரியாவின் தம்பி விபத்தில் இறந்துவிட்டதால், துக்கம் விசாரிப்பதற்காக அங்கு சென்று விட்டார் விக்னேஷ்.. மாதையன் சந்தையில் ஆடுகள் வாங்க சென்று விட்டார். இதனால், சின்னப்பொண்ணு மற்றும் பேத்தியான 7 வயது சிறுமி, மாதையனின் அண்ணன் வெங்கடாசலம் ஆகியோர் மட்டும் இருந்தனர்.
அன்றைய தினம் இரவு இவர்கள் 3 பேருமே சாப்பிட்டுவிட்டு படுக்கைக்கு சென்றுவிட்டார்கள்.. முற்றத்தில் கயிற்று கட்டிலில் வெங்கடாசலம் தூங்கினார்.. வீட்டிற்குள் பேத்தியுடன் சின்னப்பொண்ணு தூங்கினார்.. நேற்று காலையில், சந்தைக்கு சென்றிருந்த மாதையன் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது, சின்னப்பொண்ணு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. அவரது ஆடைகள் கிழிந்திருந்தன.. உடம்பெல்லாம் நகக்கீறல்கள், காயங்கள் கிடந்தன.. சிறுமி கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தாள். ஆனால், வெங்கடாசலத்தை காணவில்லை.
போஸ்ட் மார்ட்டம்
அதற்குள் இதுகுறித்து தகவலறிந்து கொங்கணாபுரம் போலீசார் விரைந்து வந்து, சின்னப்பொண்ணுவின் சடலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துவிட்டு, விசாரணையையும் கையில் எடுத்தனர்.. இதன் முதற்கட்ட விசாரணையில், சின்னப்பொண்ணு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது..
ஆனால், இரவு தூங்க சென்ற சிறுமி, காலையில் நேரமாகியும் படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளாமல், கட்டிலில் தூங்கிக் கொண்டேயிருந்தார்.. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. குடும்பத்தினருக்கு நன்றாக அறிமுகமானவர்தான், வீடு புகுந்து இப்படியொரு காரியத்தை செய்திருக்க முடியும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போதுதான், 43 வயது காவேரி என்ற நபர் மீது போலிசாருக்கு சந்தேகம் திரும்பியது..
ஆட்டு வியாபாரி காவேரி
பக்கத்து வீட்டுக்காரரான காவேரி, ஆட்டு வியாபாரி செய்துவருகிறார். எனவே, இவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போதுதான், சின்னப்பொண்ணு மீது பல காலமாகவே காவேரிக்கு ஒரு கண் இருந்து வந்ததாம்.. இதனால் வீட்டில் யாருமே இல்லாத சமயங்களில், சின்னபொண்ணுவுக்கு பாலியல் தொல்லை தந்து வந்திருக்கிறார்.. அதற்கு உடன்படாத சின்னபொண்ணு, காவேரியை கடுமையாக எதிர்த்தும், கண்டித்தும் வந்துள்ளார்..
இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் அனைவரும் வெளியூர் சென்றிருப்பதை தெரிந்துகொண்ட காவேரி, தன்னுடைய மனைவி, குழந்தைகளை, தர்மபுரி காலபைரவர் கோயிலுக்கு அனுப்பி வைத்துவிடடு, நேற்று அதிகாலை சின்னப்பொண்ணுவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.. வீட்டின் முன்பு படுத்திருந்த வெங்கடாசலத்தை தட்டி எழுப்பி, வெளியே அழைத்து சென்று மது வாங்கி தந்து, போதை தலைக்கேறும் அளவுக்கு குடிக்க வைத்துள்ளார்.. இதனால் வெங்கடாசலம் அங்கேயே போதையில் விழுந்துவிட்டார்..
இன்று போஸ்ட் மார்ட்டம்
இதற்கு பிறகு காவேரி மட்டும், வீட்டுக்கு வநது சின்னப்பொண்ணுவிடம் அத்துமீறலில் இறங்கியிருக்கிறார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த காவேரி, மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்..
இதனால் ஆத்திரமடைந்த காவேரி, சின்னப்பொண்ணுவின் கழுத்தை பிடித்து நெரித்து கொன்றுள்ளார்.. இவ்வளவும் விசாரணையில் உறுதியானதையடுத்து, காவேரியை போலீசார் கைது செய்தனர். இன்று சின்னபொண்ணுவின் போஸ்ட் மார்ட்டம் நடக்க போகிறது.. இந்த ரிப்போர்ட் வந்தால்தான் பலாத்கார முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது பலாத்காரத்தால் உயிரிழந்தாரா என்பது தெரிய வருமாம்.












Click it and Unblock the Notifications