"கொழுந்தியாள்".. சேலத்தை பதற வைத்த பாலியல் வன்மம்.. ஒரே நேரத்தில் ஓமலூர் ஸ்டேஷனில் அக்கா - தங்கை
சேலம்: ஆசை ஆசையாக காதல் திருமணம் செய்த கணவரையே போலீசில் புகார் தந்து கைது செய்ய வைத்துள்ளார் இளம்பெண்.. என்ன காரணம்?
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ளது பெரியசோரகை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சுரேஷ்குமார்.. 30 வயதாகிறது.. இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்தார்.. ஆனால், இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வலுத்தது. அதனால், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அந்த பெண்ணை 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம்: கடந்த 4 வருடமாகவே இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், திடீரென வரதட்சணை பிரச்சனையை கிளப்பினார் சுரேஷ்குமார்..
ஒருகட்டத்தில் தன்னுடைய மனைவியை அடித்து உதைத்து, அம்மா வீட்டுக்கு சென்று நகை, பணம் வாங்கி வர வேண்டும் என்று சித்ரவதை செய்தார்.. நாளுக்கு நாள் சுரேஷ்குமாரின் கொடுமை அதிகரித்தது.. இதனிடையே, மனைவியின் தங்கை, தன்னுடைய அக்காவை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளார்..
மச்சினிச்சி: அந்த பெண்ணுக்கு 21 வயதாகிறது.. வீட்டில் மனைவி இல்லாத நேரங்களில் எல்லாம், சுரேஷ்குமார், தன்னுடைய மச்சினிச்சியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து வந்துள்ளார்.. வீட்டில் அடைத்து வைத்து, இந்த பாலியல் வக்கிரத்தை அரங்கேற்றியுள்ளார். அத்துடன், பலாத்காரம் செய்யும்போது, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பிறகு, அந்த வீடியோவை வைத்தே, மச்சினிச்சியை மிரட்ட துவங்கினார்.. சோஷியல் மீடியாவில் வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், தான் அழைக்கும்போதெல்லாம் விருப்பத்துக்கு உடன்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
வரதட்சணை: இதற்கு நடுவில், மனைவியிடம் வரதட்சணை கொடுமையும் அதிகமாகி கொண்டே போனது.. போதாக்குறைக்கு, குழந்தை பிறக்கவில்லை என்று மனைவியிடம் அடுத்த பிரச்சனையை கிளப்பினார்..
"உனக்கு குழந்தை பிறக்கவில்லை. அதனால், உன் தங்கையை 2ம் கல்யாணம் செய்து கொள்கிறேன்... 3 பேருமே வேறு ஊருக்கு போயிடலாம்.. ஒன்றாக ஒரே வீட்டில் வாழலாம் என்று சுரேஷ்குமார் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கைதான் பாழாகிவிட்டது, தங்கையின் வாழ்க்கையாவது நல்லா இருக்க வேண்டும் என்று சொல்லி, இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு சொல்லியிருக்கிறார்..
மனைவி: இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், இந்த காரணத்தை வைத்தும், மனைவியை அடித்து உடைத்து வீட்டை விட்டே விரட்டியுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட அக்கா, தங்கை 2 பேருமே ஓமலூர் மகளிர் ஸ்டேஷனுக்கு போய்விட்டார்கள்..
சுரேஷ்குமார் மீது புகாரையும் தந்தனர்.. ஆனால் அதற்குள் சுரேஷ்குமார் எஸ்கேப் ஆகிவிட்டார்.. பிறகு போலீசார் தீவிரமான தேடுதல் வேட்டையை நடத்தி சுரேஷ்குமரை சுற்றி வளைத்து பிடித்தனர்.. அவரது செல்போனை பறிமுதல் செய்து, அதனை ஆய்வு செய்ய சைபர் கிரைம் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஒரே நேரத்தில் அக்கா - தங்கை 2 பேருமே போலீசுக்கு சென்றுள்ள இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications