பணி மாறுதல் விவகாரம்: சேலத்தில் நீதிபதியை கத்தியால் குத்திய நீதிமன்ற ஊழியர் கைது
சேலம்: பணிமாறுதல் விவகாரத்தில் சேலத்தில் நீதிபதியை நீதிமன்ற ஊழியர் ஒருவரே கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் நான்கில் நீதிபதியாக பணி புரிந்து வருபவர் பொன் பாண்டியன். இன்று காலை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள நீதிபதி அறையில் பொன் பாண்டியன் இருந்தபோது அங்கே வந்த நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் என்பவர் பணி மாறுதல் குறித்து நீதிபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது நீதிமன்ற ஊழியர் பிரகாஷ் தனது கையில் வைத்திருந்த கத்தியால் நீதிபதியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் நீதிபதி பொன் பாண்டியனின் மார்பு பகுதியில் காயம் காயம் ஏற்பட்டது.
இதனால் நீதிபதி கூச்சலிட, அங்கிருந்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர் பிரகாஷ்யை பிடித்து அஸ்தம்பட்டி காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காயமடைந்த நீதிபதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மார்பு பகுதியில் தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட நீதிபதி குமரகுரு, சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
நீதிபதியை நீதிமன்ற ஊழியர் கத்தியால் குத்திய இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications