சேலத்தில் கொத்தனாருடன் தண்ணி அடித்த நகராட்சி ஊழியர் மணிமேகலை.. அதை வேற டூவீலரில் கட்டியிழுத்து! பரபர
சேலம்: சேலத்தில் உள்ள பாலத்துக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் சடலம் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணியிருந்த நிலையில், கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பிறகு உண்மைக்குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்து, கைது செய்துள்ளனர்.. இதற்கென களமிறக்கப்பட்ட தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் குற்றவாளி யார் என்பது அம்பலமாகியிருக்கிறது. தற்போது குற்றவாளி தந்திருக்கும் வாக்குமூலம் அதற்கு மேல் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ளது அக்கா அம்மாபேட்டை.. இந்த சங்ககிரி நகராட்சியில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தவர் மணிமேகலை.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வந்துவிட்டார்.. இரண்டு குழந்தைகளையும் கணவரிடமே தந்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து, நகராட்சியில் வேலை பார்த்து வந்துள்ளார்..
பாலத்துக்கு அடியில் நிர்வாண சடலம்
இந்நிலையில், கடந்த 17ம் தேதி சங்ககிரி திருச்செங்கோடு புதிய நான்கு வழி சாலையில் உள்ள பாலத்தின் அடியில் மணிமேகலை சடலமாக கிடந்தார்.. அவரது உடல் நிர்வாணமாக கிடந்தது.. தலையெல்லாம் சிதைந்து போய் கிடந்தது.. கை கால்கள் சேலையால் கட்டப்பட்டிருந்தன..
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சங்ககிரி போலீசாருக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மணிமேகலை சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அனுப்பியது.. பிறகு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டது.
மணிமேகலையை கொன்றது யார் என்று தெரியாததால், இதற்காகவே, கொலையாளியை பிடிக்க சங்ககிரி டிஎஸ்பி சிந்து மேற்பார்வையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது.. பிறகு, மணிமேகலையுடன் போனில் அடிக்கடி பேசியவர்கள் யார்? ஒன்றாக பணிபுரிந்தவர்கள் யார்? யார் யாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்? என்பது போன்ற ஆய்வுகள் ஆரம்பமாகின.
பரபரப்பு வாக்குமூலம்
அப்போதுதான், சம்பவம் நடந்த நாளில், அதே பாலத்துக்கு அடியில், கார்த்திக் என்பவர் டூவீலரில் சென்றது, சிசிடிவியில் பதிவாகியிருந்தது.. அக்கா அம்மாபேட்டை அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் இந்த கார்த்திக். மணிமேகலையின் பக்கத்து வீட்டில் வசிப்பவராம்...
இதையடுத்து, தனிப்படை போலீசார் கார்த்திக்கை பிடித்து தங்கள் பாணியில் விசாரணையை நடத்தியபோதுதான், நடந்த உண்மையை கார்த்திக் போலீசாரிடம் வாக்குமூலமாக சொன்னார். அதாவது மணிமேகலையும், கார்த்திக்கும் அடிக்கடி டூவீலரில் ஒதுக்குப்புறமாக சென்று மது அருந்துவது வழக்கமாம்.
அதுபோல கடந்த 14ம் தேதியும், மணிமேகலையை தன்னுடைய டூவீலரில் உட்கார வைத்து, காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.. அப்போது காட்டுவளவு என்ற இடத்தில் உட்கார்ந்து 2 பேரும் ஒன்றாக தண்ணி அடித்திருக்கிறார்கள். பிறகு தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அழைத்தாராம்..
ஆனால், மணிமேகலை அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், தொடர்ந்து பாலியல் தொல்லை தந்தால், உன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணிடம் சொல்லிவிடுவேன் என்றும் மிரட்டினாராம்..
சேலையை உடம்பில் சுற்றி
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், கீழே கிடந்த கல்லை எடுத்து மணிமேகலை தலையில் போட்டுள்ளார்.. இதில் தலைநசுங்கி மணிமேகலையின் முகம் முற்றிலும் சிதைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தும்விட்டார்..
உடனே மணிமேகலையின் சடலத்தை டூவீலரில் உட்கார வைத்து, அந்த சடலத்தை தன்னுடைய உடம்பில் சேலையால் கட்டி, வண்டி ஓட்டி சென்றுள்ளார் கார்த்திக்.. கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரம் உள்ள ஏரிக்காடு என்ற இடத்திற்கு சென்றதுமே, அங்கிருந்து பாலத்திற்கு அடியில் மணிமேகலையின் சடலத்தை வீசி விட்டுசென்றுவிட்டார்.. இந்த 10 நாட்களாகவே எந்தவிதமான சலனமுமின்றி, சர்வ சாதாரணமாக சுற்றி வந்துள்ளார் கார்த்திக்..
வாக்குமூலம் - பரபரப்பு
காரணம், மணிமேகலைக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்ததாம். அதனால், தன்னை போலீஸ் பிடிக்காது என்ற நம்பிக்கையில் ஊருக்குள்ளேயே வலம் வந்துள்ளார்.. இவ்வளவும் வாக்குமூலத்தில் தெரிய வந்துள்ளதையடுத்து இப்போது கட்டிட தொழிலாளியான கார்த்திக், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. பெண் துப்புரவு ஊழியரை கொன்ற வழக்கில், 15 நாட்களுக்கு பிறகு குற்றவாளி சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications