சேலத்துல முருகேசனுக்கு தலையே சுத்துது.. 1, 2, 3 பேரா? தண்ணி தொட்டிக்குள்ளே போலீஸ் எட்டி பார்த்தால்?
சேலம் : சேலம் முருகேசனுக்கு பிறந்தநாள்.. தன்னுடன் வேலை பார்க்கும், எல்லாருக்கும் கேக் தந்துட்டே இருந்தாரு.. அப்பதான் அந்த அதிர்ச்சி போன் வந்தது. என்ன நடந்தது?
சேலத்தை சேர்ந்தவர் முருகேசன்.. 45 வயதாகிறது.. 4 ரோடு பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் முருகேசன் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் சுகுணவள்ளி.. 40 வயதாகிறது. இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகிறது.. லவ் மேரேஜ் வேற.. ஆனால், இவர்களுக்கு இன்னும் குழந்தைகள் இல்லை.

பிறந்தநாள்: இந்நிலையில் நேற்று முன்தினம் முருகேசனுக்கு பிறந்தநாள் ஆகும். காலையிலேயே எழுந்து குளித்து, மனைவியிடம் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு, 10 மணிக்கு ஜவுளிக்கடைக்கு குதூகலமாக கிளம்பி சென்றார்.
பிறந்தநாள் என்பதால், கடையிலிருந்தவர்களுக்கு கேக், ஸ்வீட்டுகளை தந்து கொண்டிருந்தார் முருகேசன். அந்த நேரம் பார்த்து, முருகேசனுக்கு, பக்கத்து வீட்டு பெண்ணிடமிருந்து போன் வந்தது... சுகுணவள்ளியை வீட்டில் காணவில்லை என்றும், அவரது வளையல்கள் தரையில் உடைந்து கிடந்ததாகவும், வீடெல்லாம் ரத்தக்கறையாக இருப்பதாகவும் சொன்னார்.
வளையல்கள்: இதைக்கேட்டு பதறிப்போன முருகேசன், வீட்டுக்கு தலைதெறிக்க ஓடிவந்தார்.. நிஜமாகவே, சுகுணவள்ளி வீட்டில் இல்லை.. வளையல்களும் உடைந்து கிடந்தன.. ரத்தக்கறையும் கிடந்தது.. உடனே பள்ளப்பட்டி போலீசுக்கு ஓடினார்.. விஷயத்தை சொல்லவும், போலீசார் விரைந்து வீட்டுக்கு வந்தார்கள்..
வீடு முழுக்க தேடியும் சுகுணவள்ளி கிடைக்காததால், வீட்டிற்கு வெளியே தேட துவங்கினர்.. அப்போது, சம்ப் என்று சொல்லக்கூடிய கீழ் மட்ட தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது, சுகுணவள்ளி ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது தலையில் பலமான வெட்டுக்காயங்கள் இருந்தன.. பின்னர் சடலத்தை மீட்ட போலீசார், போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு விசாரணையையும் உடடினயாக தொடங்கினர்.
காதல்: முதலில் சுகுணவள்ளியின் செல்போனை ஆய்வு செய்தனர்.. அப்போதுதான், சுகுணவள்ளியின் தகாத உறவுகள் அம்பலமாயின.. சில ஆண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
குறிப்பாக 3 ஆண்களுடன் தொடர்பில் இருந்திருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அந்த 3 பேரும் யார் என்று விசாரித்தனர்..
சுகுணவள்ளி: ஒருவர் சுகுணவள்ளியின் நண்பர், இன்னொருவர் ஆட்டோ டிரைவர், மற்றொருவர் தனியார் பள்ளி பஸ் டிரைவர்.. இவர்கள் 3 பேருமே சுகுணவள்ளியை அடிக்கடி சந்தித்து, ரகசிய உறவையும் வளர்த்து வந்துள்ளனர்.. சுகுணவள்ளியுடன் தகாத உறவு இருப்பதை 3 பேருமே ஒப்புக் கொண்டனர்.
இதற்கு அடுத்தபடியாக, வீட்டுக்கு அருகிலிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். சம்பவத்தன்று, ஹெல்மெட் அணிந்த நபர், வீட்டுக்குள்ளிருந்து வேகமாக தப்பி ஓடுவது பதிவாகியிருந்தது. ஆனால், அவரது வண்டியை காணவில்லை.. வெறும் ஹெல்மெட்டுடன் வீட்டை விட்டு ஓடுகிறார்.. அப்படியானால், பைக்கை வேறு எங்காவது நிறுத்தி வைத்துவிட்டு, அங்கிருந்து ஹெல்மெட்டுடன் நடந்து வந்து வீட்டுக்குள் நுழைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
யார் அந்த நபர்: அதனால், அடுத்தடுத்த பகுதியிலிருக்கும் சிசிடிவியை ஆய்வு செய்தனர்.. அந்த நபர் போலீசார் நினைத்ததுபோலவே, பைக்கில் செல்வது பதிவாகியிருந்தது.
அந்த பைக்கின் நம்பரை வைத்து, சம்பந்தப்பட்ட ஹெல்மட் நபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.. இவரது மனைவியும், சுகுணவள்ளியும் நெருங்கிய தோழிகளாம். ஆனால், இந்த நபரிடமிருந்து மனைவியை, சுகுணவள்ளி பிரித்துவிட்டாராம்.
சுகுணவள்ளி: தன் மனைவி, தன்னைவிட்டு பிரிந்து செல்ல காரணமே சுகுணவள்ளிதான் என்பதால், ஆத்திரத்தில் அவரை கொன்றதாக போலீசில் கூறியுள்ளார்.. இந்த ஹெல்மெட் நபர் யார்? என்று தெரியவில்லை.. இவரிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது..
ஆனால், சுகுணவள்ளியை கொலை செய்தவர்கள் யாரென்று விசாரிக்கபோய், அந்த 3 கள்ளக்காதல் மேட்டர் வெளியே வந்திருப்பதாக சொல்கிறார்கள்.. இருந்தாலும், முருகேசனுக்கு தன் பிறந்தநாளில் இப்படி ஒரு அதிர்ச்சியா???












Click it and Unblock the Notifications