சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொல்லியும் கேட்கவில்லை.. காரை நிறுத்தவில்லை.. டிடிவி தினகரன் மீது வழக்கு பதிந்த போலீஸ்

Google Oneindia Tamil News

சேலம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது சேலம், வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில் தமிவகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும், சட்டசபை இடைத் தேர்தல்களில் 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது. பரிசுப் பெட்டகம் சின்னம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Salem police registered complaint against TTV Dinakaran

இதையடுத்து டிடிவி தினகரன் மாநிலம் தழுவிய அளவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதேபோல சேலம் அருகே தினகரன் தனது காரில் பிரச்சாரத்திற்காக சென்றுள்ளார். அப்போது, ஆச்சாங்குட்டப்பட்டி அருகே தினகரனின் காரை தேர்தல் அதிகாரிகள் வழிமறித்தனர். ஆனால், காரை நிறுத்தாமல் அவர் சென்றுவிட்டார்.

எங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளது.. பணம் இல்லை.. சொல்கிறார் அன்புமணி எங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளது.. பணம் இல்லை.. சொல்கிறார் அன்புமணி

இதுபற்றி தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், டிடிவி தினகரன் மீது சேலம், வீராணம் காவல் நிலையத்தில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆச்சாங்குட்டப்பட்டி அருகே தேர்தல் அலுவலர்கள் என்று சொல்லியும் காரை நிறுத்தவில்லை என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன செய்தார் உங்கள் எம்.பி.

English summary
Salem police have registered a complaint against TTV Dinakaran for not co operating with election commission.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X