சேலம் டீச்சரின் மரண வாக்குமூலம்.. சந்தோஷமாக வாழ ஆசைப்பட்ட சண்முகப்பிரியா! யாரந்த பத்திர ஆபீஸ் ஊழியர்
சேலம்: சேலம் டீச்சரின் மரணமும், அவரது மரண வாக்குமூலமும் நேற்று முதல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. காதலனின் ஏமாற்றத்தால் இளம் ஆசிரியை எடுத்த விபரீத முடிவும், அவரது 4 பக்க உருக்கமான கடிதம், நவீன கால காதல் உறவுகளில் ஒளிந்திருக்கும் வன்மத்தையும், டிஜிட்டல் மிரட்டல்களையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.. இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள காதலனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்..
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம் பெண் சண்முகப்பிரியா.. தனியார் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்..

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கவுதம் என்ற இளைஞரருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது.. ஆரம்பத்தில் சுமூகமாக சென்ற இவர்களது காதலில், சமீபகாலமாகப் பிளவு ஏற்பட்டுள்ளது..
இதனால் சண்முகப்பிரியா, கவுதமுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததோடு, காதலையும் முறித்துக் கொள்ள முயன்றுள்ளார்.. ஆனால், கவுதம் அவரை விடாமல் துரத்தித் துரத்திக் காதலிப்பதாகவும், உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
மிரட்டலும் தற்கொலையும்
சண்முகப்பிரியா பிடிவாதமாக திருமணத்திற்கு மறுத்து வந்த நிலையில், கவுதம் அவருக்குத் தொடர்ந்து மன ரீதியாகத் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.. "என்னைத் திருமணம் செய்யவில்லை என்றால் உன்னுடைய தனிப்பட்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு உன் வாழ்க்கையையே அழித்துவிடுவேன்" என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது..
காதலனின் இந்தத் தொடர் தொந்தரவாலும், மிரட்டலாலும் சண்முகப்பிரியா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.. ஒருகட்டத்தில் அவமானத்திற்கும் பயத்திற்கும் அஞ்சி, கடந்த பிப்ரவரி 18-ம் தேதி அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்..
4 பக்க மரண வாக்குமூலம்:
சண்முகப்பிரியா தற்கொலை செய்வதற்கு முன்பாக ஆங்கிலத்தில் எழுதிய 4 பக்கக் கடிதத்தில், கவுதம் தனக்கு கொடுத்த சித்ரவதைகளை மிக விரிவாகவும் வேதனையுடனும் பதிவு செய்துள்ளார்..
அந்தக் கடிதத்தில் "அக்கா, கவுதமை மட்டும் சும்மா விட்றாதீங்க.. அவனுக்குக் கண்டிப்பா தண்டனை கிடைக்கணும்.. நான் பேச்சை நிறுத்தியும் அவன் என்னை விடாமத் துரத்தித் தொந்தரவு செஞ்சான்.. என் சாவுக்கு அவன் தான் முழு காரணம்.. என்னைத் தற்கொலை செஞ்சுக்கத் தூண்டிய அவனைச் சட்டத்தின் முன் நிறுத்துங்க.. அப்போதான் என் ஆத்மா சாந்தியடையும்.." என்றெல்லாம் எழுதியுள்ளார்..
போலீஸ் விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் தற்கொலைக்குத் தூண்டுதல் (பிரிவு 306) மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.. சண்முகப்பிரியாவின் செல்போனை ஆய்வு செய்தபோது, கவுதம் அவரைத் தொடர்ந்து செல்போனில் அழைத்து மிரட்டியதும், நெருக்கடி கொடுத்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது..
ஆசிரியை மரணத்தைத் தொடர்ந்து கவுதம் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர்.. அவர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுச் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது..
உறவினர்கள் கதறல்
ஆசிரியை சண்முகப்பிரியாவின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்ய ஓமலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.. ஆனால், சண்முகப்பிரியாவின் தற்கொலைக்குக் காரணமான கவுதமை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், அதுவரை மகளின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மருத்துவமனை முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்..
இதனால் ஓமலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.. போராட்டக்காரர்களிடம் ஓமலூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளியைத் தப்பவிடாமல் பிடித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகும்கூட நேற்று உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்..
பத்திர ஆபீஸ் ஊழியர்
இப்போது கவுதம் எங்கே என்று தெரியவில்லை... சண்முகப் பிரியாவும், அமரகுந்தி பகுதியைச் சேர்ந்த கௌதமும் கல்லூரியில் ஒன்றாக படித்தபோதே காதல் மலர்ந்துள்ளது.. கவுதம் சூரமங்கலத்தில் உள்ள பத்திர எழுத்தர் ஒருவரிடம் ஊழியராக வேலை பார்த்து வருகிறாராம்..
ஆரம்பத்தில் சரியாக இருந்த கவுதம், பிறகு நாளுக்கு நாள் நடவடிக்கை சரியில்லாமல் போயுள்ளது.. அதனால் சண்முகப்பிரியா அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். அப்படி இருந்து கவுதம் சண்முகப்பிரியாவின் தாய் விஜயலட்சுமியை சந்தித்து திருமணம் தொடர்பாக பேசியபடியே இருந்தாராம்...!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications