சேலம் மளிகை கடைக்காரர் வீட்டில் புகுந்தது இவரா? சூரமங்கலம் வித்யா தம்பதி கேஸில் திடீர் திருப்பம்?
சேலம்: சேலம் சூரமங்கலம் அடுத்த ஜாகீர் அம்மாப்பாளையம் பகுதியில் நடந்த இரட்டை கொலை குறித்த விசாரணையை போலீசார் இன்று 2வது நாளாக விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான கும்பலை பிடித்து அவர்களிடமும் விசாரணையும் நடக்கிறது. இந்நிலையில், நேற்றைய தினம் நடந்த கொலை குறித்து கூடுதல் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சேலம் எட்டிகுட்டை தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன்.. 70 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் வித்யா.. 65 வயதாகிறது.. இந்த தம்பதியின் தங்களது வீட்டுக்கு முன்பகுதியிலேயே மளிகை கடை வைத்து நடத்தி வந்தனர்.

பால் வியாபாரம்
இவர்களுக்கு ராமநாதன் (எ) தினேஷ் மற்றும் வாசுதேவன் (எ) ஆனந்த் என்ற 2 மகன்கள் உள்ளனர். மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மூத்த மகன் ராமநாதன், மனைவி, குழந்தைகளுடன் தர்மன் நகரில் உள்ளார்.. பால் வியாபாரம் செய்யும் வாசுதேவன், தன்னுடைய பெற்றோருடனேயே, மனைவியோடு வசித்து வருகிறார்கள். வாசுதேவன் பாஸ்கரன் வீட்டுக்கு மேல் போர்ஷனில் தங்கியிருக்கிறார்.
பாஸ்கரனுக்கு 70வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில், குடும்பத்தினருடன், நேற்று 12ம் தேதி பழநி கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்..
இருவருமே உயிரிழப்பு
பால் வியாபார கலெக்ஷனுக்காக வெளியே செல்வதற்காக நேற்று மாலை மாடியிலிருந்த வாசுதேவன், கீழே இறங்கி வந்தார்.. அப்போது, வித்யா சடலமாகவும், பாஸ்கரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டுமிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்பாவை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றும், வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.
இது தொடர்பான போலீஸ் விசாரணை ஆரம்பமானது.. மர்ம கடப்பாரை, சம்மட்டி போன்ற பயங்கர ஆயுதங்களால் மர்மநபர்கள் தம்பதியினரை அடித்து கொன்றது தெரியவந்துள்ளது.. உயிரிழந்த தம்பதிக்கு எந்தவித முன்விரோதமோ, சொத்து பிரச்சனையோ இல்லை என்கிறார்கள்.. அவர்கள் அணிந்திருந்த 16 சவரன் நகைகள் மட்டும் மாயமாகியிருக்கிறதாம்.
ஈரம்கூட காயவில்லை
அதாவது, பாஸ்கரன், வித்யா 2 பேருமே, பெரும்பாலான நேரங்களில் மளிகை கடையில்தான் இருப்பார்களாம்.. நேற்று மதியம் 3.30 மணியளவில் பாஸ்கரன் சாப்பிட்டுவிட்டு, கடையில் இருந்துள்ளார்... அதன் பிறகு, வித்யா மட்டும் தனியாக சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே, வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் புகுந்து கொலை செய்திருக்கிறார்கள்..
வித்யாவை தாக்கி நகைகளை பறிக்கும்போது, அதனை தடுக்க வந்த பாஸ்கரனையும் தாக்கி கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. ஆனல், வித்யாவின் கையில், சாப்பிட்டதற்கான ஈரம் கூட காயாமல் அப்படியே இருந்ததாம்.. அதுமட்டுமல்ல, பழநிக்கு செல்ல வாங்கி வைத்திருந்த பழம், பூ எல்லாவற்றிலும் ரத்தம் படிந்துள்ளது.
யாரந்த கும்பல்
வித்யா தலையில், 3 இடங்களில் ஆயுதத்தால் வெட்டியிருக்கிறார்கள்.. அதேபோல பாஸ்கரன் தலையிலும் வெட்டப்பட்டுள்ளது.. இப்போது அந்த பகுதியில் உள்ள, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததுடன், சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பலை பிடித்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு நேரடியாகவே இந்த வழக்கை விசாரித்து கொண்டிருக்கிறார்..
இப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நர்ஸ் ஒருவரை, அவருடைய கணவரே கல்லால் அடித்து கொன்றார்.. இப்போது இந்த இரட்டைக்கொலை சேலத்தில் பெரும் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது.
ஒருவர் கைது
இந்த நிலையில், முதியவர்களை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான இவர், அதே பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். கடன் பிரச்சினை காரணமாகவே தம்பதியை அடித்து கொன்று, அவர்களிடம் இருந்து 10 சவரன் செயினை எடுத்துச் சென்றதாக சந்தோஷ் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இப்போது அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications