சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உல்லாச விருந்து.. சொக்கி போன அரசியல் "தலை"கள்.. அதென்ன வீடியோ.. போலீசுக்கு புகாருடன் போன கலைச்செல்வி

சேலம் கலைச்செல்வி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் தந்துள்ளார்

Google Oneindia Tamil News

சேலம்: அரசியல்வாதிகளிடம் பணம் பறிக்கும் வகையில் பெண் ஒருவர் ஆபாசமாக போனில் பேசி வந்ததாக 2 நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது.. இந்நிலையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சம்பந்தப்பட்ட பெண்ணே புகார் ஒன்றை தந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி... இவர் சேலத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களிடம் நெருக்கமாக இருந்ததாக சொல்கிறார்கள்..

அதாவது மாவட்டத்தில் ஒவ்வொரு கட்சியிலும் செல்வாக்காக இருக்கும் 6 புள்ளிகளை தேர்வு செய்து, அதில் 3 பேர்களிடம் கலைச்செல்வி தொடர்பு கொள்வாராம்.. மெல்ல மெல்ல பேசியே அவர்களிடமும் நெருக்கமும் காட்டுவாராம்..

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் தொடங்கியது.. கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடு! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் தொடங்கியது.. கொரோனா பரவலால் கடும் கட்டுப்பாடு!

 உல்லாச விருந்து

உல்லாச விருந்து

பிறகு ஒவ்வொருவரையும் தனித்தனியாக உல்லாச விருந்து என்று வீட்டிற்கு சொல்லி அழைப்பாராம்.. அவர்களுடன் நெருக்கமாக இருக்கம்போது அதை வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டு பிறகு, மிரட்ட தொடங்குவார் என்று கூறப்படுகிறது.. அவர்களும் பயந்து கொண்டு லட்சக்கணக்கில் கலைச்செல்வியிடம் பணத்தை கொட்டி கொடுத்ததாகவும், இதற்கெல்லாம் கலைச்செல்விக்கு செல்வம் மற்றும் ரூபக் என்பவர்கள் உடந்தையாக இருந்ததாகவும் தெரிகிறது..

தகராறு

தகராறு

ஆனால் மிரட்டி வாங்கப்பட்ட பணத்தை பங்கு போடுவதில் ஏதோ தகராறு ஏற்பட்டு, அதனால், கலைச்செல்வியை ரூபக் கடத்தி கொண்டுபோயுள்ளார்.. அரசியல் பிரமுகர்களை மிரட்டி பணம் வாங்கியதாக கலைச்செல்வியிடம் வீடியோ மூலம் வாக்குமூலம் ஒன்றை ரூபக் வாங்கி கொண்டுள்ளார்.. பின்னர், ரூபக்கிடம் இருந்து ஒருவழியாக தப்பித்து வந்த கலைச்செல்வி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்..

விரக்தி

விரக்தி

அந்த வீடியோவில், 3 அரசியல் பிரமுகர்களில் ஒருவரான நாகேந்திரன் என்பவர், ஏமாற்றம் அடைந்த விரக்தியில் தன்னை கொலை செய்ய முயல்வதாகவும் கலைச்செல்வி அதில் புகார் கூறியிருந்தார். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானதையடுத்து, தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாக கலைச்செல்வி மீது சேலம் காவல் நிலையத்தில் நாகேந்திரன் புகார் தந்தார்.. இதெல்லாம் கடந்த 2 நாட்களாக வெளிவந்த செய்திகள் ஆகும்..

 எஸ்பியிடம் புகார்

எஸ்பியிடம் புகார்

இப்போது விஷயம் என்னவென்றால், கலைச்செல்வி, ஸ்ரைட்டாக சேலம் மாவட்ட எஸ்பி.யிடமே புகார் தந்துவிட்டார்.. அந்த புகார் மனுவில் உள்ளதாவது: "இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த ரூபன், ரமேஷ் ஆகிய இருவர் காரில் என்னை கடத்தி சென்று கத்திமுனையில் கொலை மிரட்டல் விடுத்தனர்.. திமுகவை சேர்ந்த செல்வம் என்பவர் நபர் மற்றும் திமுகவை சேர்ந்த பிரமுகர்கள் பச்சமுத்து, சம்பத்குமார் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாக சொல்லுமாறு கொலை மிரட்டலும் விடுத்தனர்.

 பிரமுகர்கள்

பிரமுகர்கள்

அவர்கள் கட்டாயப்படுத்தி சொல்ல சொன்னதால்தான், பலரிடம் பேசி செல்வந்தராக இருக்கும் நபர்களிடம் பணத்தை பறித்தோம்.. செல்வந்தராக உள்ள பல அரசியல் பிரமுகர்களிடம் பணம் பறித்ததாக கூறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று துப்பாக்கிமுனையில் மிரட்டி வீடியோவில் பேச வைத்து வீடியோ எடுத்துக் கொண்டனர்.. அந்த வீடியோவை வைத்து செல்வத்திடம் பணம் வாங்கித் தரவேண்டும் என்று மிரட்டினார்கள்.. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 உண்மை தன்மை என்ன?

உண்மை தன்மை என்ன?

ஒருபக்கம் கலைச்செல்வி மீது நாகேந்திரன் தரப்பினர் புகார் தந்துள்ளனர்.. இப்போது கலைச்செல்வி வேறு ஒரு புகாரை எஸ்பியிடம் தந்துள்ளார்.. இந்த விவகாரத்தின் உண்மை தன்மை எது என்று இதுவரை தெரியவில்லை.. எனினும் போலீசார் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரித்தால் மட்டுமே உண்மை என்ன என்பது வெளியே வரும் என்கிறார்கள் சேலம் பகுதி மக்கள்..!

English summary
Salem woman Kalaiselvi complaint against Political person in Salem SP office
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X