சேலமே மிரண்டுடுச்சே.. தாய்மாமன் பின்னாடி, அதென்ன நீளமா வருதே? "அந்த" பிரபலமே ஓடி வந்துட்டாரே.. வாவ்
சேலம்: சேலம் மாவட்டத்தில் நடந்த ஒரு விசேஷம், நேற்றுமுதல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.. அப்படி என்ன நடந்தது மேட்டூர் பகுதியில்?
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால்தான், இந்த திருமணத்துக்கு ஏழ்மையில் உள்ளவர்களும் கடன்வாங்கியாவது கல்யாணத்தை செய்வார்கள்.
அமர்க்களம்: வசதியில்லாதவர்களே இப்படி என்றால், வசதி படைத்தவர்களின் ஆடம்பரத்தை சொல்லவே தேவையில்லை.. வகைவகையான ஆடம்பரங்கள், தினுசுதினுசான நகைகள், பகட்டான சீர்வரிசைகள் என கண்களை பறித்துவிடும். . மணமக்கள் ஹெலிகாப்டரில் வந்திறங்குவதும், சாரட் வண்டிகளில் ஊர்வலமாக போவதும் என எத்தனையோ அமர்க்களமான திருமணங்களை நாம் கண்டுள்ளோம்..

மாட்டுவண்டிகள்: இதில் பெரிதும் ஆச்சரியங்களை கிளப்புவது சீர் வரிசைகள்தான்.. இன்னமும்கூட நம்முடைய பாரம்பரியத்தை பறைசாற்றும்வகையில், மாட்டு வண்டிகளில் சீர்வரிசை ஊர்வலம், ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட கால்நடைகளை மணமேடையில் பரிசளிப்பது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.. சில நாட்களுக்கு முன்புகூட, உசிலம்பட்டியில் ஒரு காதணி விழா நடந்து, சுற்றுவட்டார மக்களையே ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது..
திருமணம், காதுகுத்து, என்றாலே மதுரை மாவட்டம்தான் ஃபேமஸ்.. விசேஷங்களுக்கு செய்முறைகளை செய்து அசத்திவிடுவார்கள்.. அதிலும் "தாய்மாமன் சீர்" என்றாலே, மதுரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே கூடுதல் விசேஷம் உண்டு.. இப்போதும் ஒரு தாய்மாமன் சேலத்தில் அசத்திவிட்டார்..

அருண்பிரசாத்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, குஞ்சாண்டியூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வகுமார்-ஸ்ரீதேவி தம்பதியினர்.. இவர்களது மூத்த மகள் அர்ச்சிதாவின் மஞ்சள் நீராட்டு விழா குஞ்சாண்டியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அர்ச்சிதாவின் தாய் மாமன் அருண்பிரசாத் வருகை தந்தார்.. அருண்பிரசாத்தின் வீடு, மேச்சேரி அருகே உள்ள மூர்த்திப்பட்டியில் இருக்கிறது.. இந்த இடத்தில் இருந்து சீர்வரிசைகளை, மண்டபம் வரை கொண்டு சென்று திணறடித்துவிட்டார்.

வழக்கமாக, மாட்டுவண்டிகளில்தான் சீர்வரிசைகளை தாய்மாமன்கள் கொண்டுசெல்வார்கள்.. ஆனால், இந்த தாய்மாமன் சற்று வித்தியாசமாக, கன்டெய்னர் லாரியில் சீர்வரிசைகளை ஊர்வலமாக கொண்டு வந்தார். லாரியில் பழம் வகைகள், பூ வகைகள், தேங்காய், வாழைப்பழம் உள்பட பல்வேறு சீர்வரிசைகளை 259 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன.. லாரிக்கு முன்புறம் 2 மாட்டு வண்டிகள், 2 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டி சென்றன. அந்த வண்டிகளிலும் சீர்வரிசைகள் நிரம்பி வழிந்தன..
அமர்க்களம்: 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் திருமண மண்டபத்திற்கு, சுமார் இரண்டரை மணி நேரத்தில் இவர்கள் அனைவருமே வந்து சேர்ந்தனர்.

இந்த ஊர்வலத்தின்போது செண்டை மேளம் முழங்க பட்டாசுகள் வெடித்து சீர்வரிசை கொண்டு வரப்பட்டன.. இவைகளை தவிர, 19 கார்கள், 75 பைக்குகளில் குஞ்சாண்டியூரில் உள்ள திருமண மண்டபத்தில் வந்து கெத்தாக இறங்கினார் தாய்மாமன்.. லாரி, பைக், குதிரை, மாட்டுவண்டி, கண்டெயினர் இவைகளில் கொண்டுவந்திருந்த சீர்வரிசைகளை அர்ச்சிதாவுக்கு வழங்கினார்..
வியப்பு: அருண்பிரசாத்தின் இந்த சீர்வரிசையானது சுற்றுவட்டார மக்களை வியப்பில் ஆழ்த்தியது.. அதுமட்டுமல்ல, இப்படி ஒரு அமர்க்களத்தை கேள்விப்பட்டு, அந்த ஏரியா, எம்எல்ஏ சதாசிவம் நேரிலேயே கிளம்பி வந்துவிட்டார் என்றால் பார்த்துக்கோங்களேன்.. அர்ச்சிதாவின் தாய்மாமனுக்கு நேரில் சென்று பாராட்டி வாழ்த்தும் தெரிவித்தார் எம்எல்ஏ சதாசிவம்.. இந்த சடங்கு விசேஷ போட்டோக்கள்தான் இணையத்தில் கலக்கலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications