Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸ்பீடா இருங்க".. ஸ்டாலின் போட்ட உத்தரவு.. தீயாய் ஆரம்பமான களப்பணி.. ஆர்வத்தில் சேலம்.. இதான் காரணம்

களப்பணியில் நேரடி ஆய்வுகளை மேற்கொள்ள நாளைய தினம் சேலம் வருகிறார் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளைய தினம் சேலம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்தும், பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசுத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மண்டல வாரியாக, மாவட்டங்களில் செயல்படுத்தப்படும், அரசு திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக "கள ஆய்வில் முதல்வர்" என்ற திட்டத்தை துவக்கினார்.

வேலூர்

வேலூர்

அதன்படி, முதல் கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் கள ஆய்வு செய்தார்.. கடந்த 1, 2 தேதிகளில் வேலூர் மண்டலத்துக்குட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.. 4 மாவட்ட போலீஸ் எஸ்பிக்களுடன், சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 4 மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.. அவர்கள் அளித்த அறிக்கை அடிப்படையில், மறுநாள் 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.. அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்தவும் அப்போது முதல்வர் அறிவுறுத்தினார்.

 ஸ்பீடா முடிங்க

ஸ்பீடா முடிங்க

இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்துக்கு நாளை வருகிறார்.. சேலம் மண்டல அளவில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் ஸ்டாலின், நாளை மாலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்திலும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) 4 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். இதையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

 ஆய்வுக்கூட்டம்

ஆய்வுக்கூட்டம்

ஆய்வுக்கூட்டம் நடக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் போலீஸ் கமிஷனர் நஜ்முல்ஹோடா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது, முதல்வர் செல்லும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோரிடம் கேட்டறிந்தார். மேலும், கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைவரையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது...

 வீடியோ கான்பரன்ஸ்

வீடியோ கான்பரன்ஸ்

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்று முதல் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்றைய தினம் எத்தலப்ப நாயக்கருக்கு நினைவு அரங்கத்திற்கான அடிக்கல்லை முதல்வர் காணொலி மூலம் நாட்டினார்.. சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில், 18 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்ட பொம்மன் திருவுருவச்சிலை, 34 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மருதுபாண்டியர்களின் உருவச்சிலை மற்றும் 43 லட்சம் ரூபாய் செலவில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி.யின் மார்பளவுச் சிலை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

 ஸ்பீடு ஸ்டாலின்

ஸ்பீடு ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, மு.பெ. சாமிநாதன், மேயர் ஆர். பிரியா, செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதேபோல, தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் 6 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விகே பழனிசாமி கவுண்டர், முன்னாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், சுதந்திரப்போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் ஆகியோருக்கு உருவச்சிலைகளுடன் கூடிய அரங்கங்கள் அமைக்கும் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், 1.47 கோடி ரூபாய் செலவில் பெருங்கா நல்லூரில் கட்டப்பட்டுள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தையும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+