இ.பி.எஸ். கோட்டையில் கால் வைத்த ஸ்டாலின்.. சேலத்தில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
சேலம்: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாளை மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சேலம் வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அவரை வரவேற்க விமான நிலையத்தில் குழுமினர். இதனை தொடர்ந்து சேலம் தீவட்டிப்பட்டியில் கூடியிருந்த பொதுமக்களிடம் கையசைத்துவிட்டு தொப்பூர் வழியாக மேச்சேரிக்கு மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கிருந்து மேட்டூருக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்க உள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சரின் சேலம் பயணத்தை முன்னிட்டு 3,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டாலினின் வருகைக்காக அவரது கான்வாய் செல்லும் சாலை நெடுகிலும் அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications