சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே... தோப்புக்கரணம் போட்டு கும்பிட்ட முதல்வர் பழனிச்சாமி

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்துகுடும்பத்தினருடன் வழிபட்டார்.

Google Oneindia Tamil News

சேலம்: விநாயகர் சதுர்த்தி தினமான இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் விநாயகரை வழிபட்டார். அபிஷேகம் ஆராதனை செய்து பிள்ளையாருக்கு படையல் போட்டு வழிபட்ட முதல்வர் பயபக்தியோடு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டார்.

Recommended Video

    விநாயகருக்கு சிறப்பு பூஜை.. குடும்பத்தினருடன் வழிபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி - வீடியோ

    முழு முதற்கடவுள் பிள்ளையாருக்காக விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

    TamilNadu Chief Minister Celebraters Vinayagar Chaturthi in Salem

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து பால் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்தார். அதனைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை செய்து அவரின் குடும்பத்தினருடன் விநாயகரை வழிபட்டார்.

    பய பக்தியோடு விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு தரிசனம் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

    TamilNadu Chief Minister Celebraters Vinayagar Chaturthi in Salem

    எவ்வினையையும் தீர்க்கும் விநாயகர், இவ்வினையையும் தீர்க்க சேலத்தில் எனது குடும்பத்துடன் வழிபட்டேன் #விநாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

    ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையார்...விநாயகரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் ஒன்பது கோளும் ஒன்றாய் இணைந்த பிள்ளையார்...விநாயகரை வணங்கினால் தோஷங்கள் நீங்கும்

    English summary
    Chief Minister Edappadi Palanichamy along with his family worshiped Ganesha today on Ganesha Chaturthi Day. After worshiping the anointing and bowing to the child, the Chief Minister reverently bowed and worshiped.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X