Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணியாரம் ருசியா இல்லையாம்.. அதுக்காக இப்படியா.. ராத்திரி 10 மணிக்கு நடந்த அக்கிரமத்தை பாருங்க..!

குடிபோதையில் மனைவியை தாக்கி கொன்ற கணவர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ளது கஞ்சநாயக்கன்பட்டி என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் லட்சுமணன்.. 30 வயதாகிறது. இவர் ஒரு கூலித்தொழிலாளி.

மனைவி பெயர் சரண்யா, 26 வயதாகிறது.. 2 பிள்ளைகள் உள்ளனர்.. லட்சுமணனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது..

 தம்பதி

தம்பதி

தண்ணி அடித்துவிட்டால், வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துவிடுவார்.. பல நேரங்களில் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கியும் விடுவார்... இந்நிலையில், சம்பவத்தன்றும் தண்ணி அடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வந்தார் லட்சுமணன்.. வழக்கம்போல் மனைவியிடமும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது... பிறகு சிறிது நேரத்தில், இரவு 10 மணிக்கு ஈரோட்டில் உள்ள சரண்யாவின் தம்பி நந்தகுமாருக்கு லட்சுமணன் போன் செய்துள்ளார்.

 அக்கா மரணம்

அக்கா மரணம்

"உன் அக்கா திடீர்னு செத்து போயிட்டா" என்று கூறியிருக்கிறார்.. இதனால் அதிர்ச்சியடைந்த நந்தகுமார் உடனடியாக பெற்றோருடன் கிளம்பி கஞ்சநாயக்கன்பட்டிக்கு வந்தார்.. சரண்யாவின் சடலம்தான் அங்கிருந்தது.. அதை பார்த்து கதறி கதறி அழுதனர்.. அப்போது சரண்யாவின் முகம் வீங்கியிருந்தது.. நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்தது.. கை, கால், உடம்பெல்லாம் ரத்தக்காயங்கள் இருந்தன..

 மர்மம்

மர்மம்

இதை பார்த்து சந்தேகம் கொண்ட நந்தகுமார், உடனடியாக தீவட்டிப்பட்டி போலீசுக்கு போனார்.. தன்னுடைய அக்காவின் சாவில் சந்தேகம் உள்ளது, கணவர் லட்சுமணன் மீது சந்தேகம் உள்ளது.. அவர்தான் அக்காவை அடித்துக் கொன்றிருக்க வேண்டும், விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.. போலீசாரும், லட்சுமணனை பிடித்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போது லட்சுமணன் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்து விட்டனர்.

பிரச்சனை

பிரச்சனை

வழக்கம்போல் அன்றையதினம் லட்சுமணன் குடித்துவிட்டு, வீட்டுக்கு வரும்போது, மனைவி, குழந்தைகளுக்காக கடையில் பணியாரம் வாங்கி வந்துள்ளார்... அதனை சரண்யா சாப்பிட்டுள்ளார்... அந்த பணியாரம் ருசியாக இல்லை, அதை எதற்கு அவ்வளவு விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று கணவனை கேட்டுள்ளார்.. பணியாரம் ருசியாக இல்லை என்று சொன்னதற்காக சரண்யாவவிடம் தகராறு செய்துள்ளார் லட்சுமணன்.. இந்த தகராறில்தான் சரண்யாவை அடித்து தாக்கினார்..

 ரத்தக்காயங்கள்

ரத்தக்காயங்கள்

கழுத்தை நெரித்துக் கொலையும் செய்துள்ளார்.. உடம்பெல்லாம் ரத்தக்காயங்கள் ஏற்பட்டு, ரத்தம் கொட்டவும்தான், லட்சுமணனுக்கு சுயநினைவே வந்துள்ளது.. அதற்கு பிறகு சரண்யாவின் தம்பிக்கு போன் செய்து திடீரென உன் அக்கா இறந்து விட்டாள் என்று கூறியுள்ளார்.. இப்போது லட்சுமணன் கைதாகி உள்ளார்.. ஒரு பணியாரத்துக்காக, விலைமதிக்க முடியாத உயிரை பறித்த கொடுமையை என்னவென்று சொல்வது?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+