தமிழை அழிக்க நினைத்தால் இங்கு கூடியுள்ள இளைஞர் படை உயிரை கொடுக்கவும் தயார்: உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
சேலம்: மத்திய அரசின் மிரட்டல்களுக்கு திமுககாரன் மட்டுமல்ல; திமுககாரன் வீட்டு கைக்குழந்தை கூட பயப்படாது என திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாட்டில் உரையாற்றிய திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “ஜனவரி 21ஆம் தேதி எனது வாழ்வில் மறக்க முடியாத நாள். திமுக இளைஞரணி மாநாடு 100% வெற்றியைப் பெற்றுள்ளது. 2024ம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வெற்றி மாநாடாக அமைந்துள்ளது. சேலத்தில் வீரத்தோடு திமுகவின் இளைஞர் படை திரண்டுள்ளது.

கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பரித்து வஞ்சிக்கிறது. இன்னும் 2000 ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் பதிக்க முடியாது. 10 ஆண்டுகால பாசிச பாஜக ஆட்சியை விரட்ட தயாராகி விட்டோம். மத்திய அரசை கேள்வி கேட்டால் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ வரும் என மிரட்டுகின்றனர். மத்திய அரசின் மிரட்டல்களுக்கு திமுககாரன் மட்டுமல்ல; திமுககாரன் வீட்டு கைக்குழந்தை கூட பயப்படாது.
தமிழர்களின் அடையாளங்களை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்துபோவீர்கள். தமிழை அழிக்க நினைத்தால் மாநாட்டில் உள்ள இளைஞர்கள் உயிரைக் கொடுக்கவும் தயார். திமுகவின் இளைஞரணி மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கிறது. நீட் எதிர்ப்பிற்கு டெல்லியிலும் போராட்டம் நடத்த திமுக இளைஞரணி தயாராக உள்ளது. திமுக ஒருபோதும் தொண்டர்களை கைவிடாது. தொண்டர்களுக்கு ஆபத்து என்றால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் வந்து துணையாக நிற்பார்.
இந்தியாவில் வேற எந்த தலைவனுக்கும் இந்த நெஞ்சுரம் இல்ல.. உதயநிதி ஸ்டாலின் தைரியசாலி: ஆ.ராசா ஆக்ரோஷம்!
தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள பாதிப்புக்கான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. நிர்மலா சீதாராமன் கேட்ட மரியாதையை நான் கொடுத்துவிட்டேன்.. ஆனால் நாங்கள் கேட்ட நிதியை அவர்கள் தரவில்லை. பெரியார்,அண்ணா,கலைஞர்,கழக தலைவர் என திராவிட இயக்க ஆசிரியர்களின் சுயமரியாதைமிக்க கொள்கை வழியில் பயணித்து சமூகநீதி,மாநில சுயாட்சி உரிமை காப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்காமல், பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பாஜக அரசு வழங்குகிறது. இந்தியாவின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி என அனைத்தையும் கழகத் தொண்டர்களாகிய நாம்தான் காப்பாற்ற வேண்டும். இந்தியா கூட்டணியின் வெற்றி இந்தியாவின் வெற்றி.” எனப் பேசியுள்ளார்.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications