எனக்கு அச்சறுத்தலா... உருட்டல், மிரட்டலுக்கு அஞ்சுற ஆள் நான் கிடையாது... எடப்பாடியார் ஆவேசம்!
சேலம்: எனக்கு அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உருட்டல், மிரட்டலுக்கு நான் அஞ்சமாட்டேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஜனநாயக நாட்டில் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாது. அண்ணன், தம்பி பிரச்சினை என்று அமைச்சர் வேலுமணி பேசியது தவறாக ஊடகத்தில் வெளிவந்துள்ளது என்று அவர் கூறினார்.
நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சி காணப்படுகிறது. எனவே அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- ஜனநாயக நாட்டில் யாரையும் அடக்குமுறை செய்ய முடியாது. அண்ணன், தம்பி பிரச்சினை என்று அமைச்சர் வேலுமணி பேசியது தவறாக ஊடகத்தில் வெளிவந்துள்ளது.

அதிமுக வெற்றி பெறும்
அதிமுகவில் கட்சி விரோதமாக செயல்பட்டால் மற்ற கட்சிகளைபோல் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவர். நீதிமன்றம் உத்தரவுபடி பலரது சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுகிறது. அரசுக்கும், இதற்கும் சம்மந்தம் கிடையாது.தொகுதி பங்கீட்டில் இருபறி என்பதே கிடையாது. பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்படும். நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சி காணப்படுகிறது. எனவே அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும்.

டிடிவி தினகரன் முயற்சி தோல்வி
அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவுடன் இணைய நினைத்தால் தலைமை ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் 18 எம்எல்ஏக்களை பிரித்து சென்றவர் டிடிவி தினகரன். அவரது முயற்சி செயல்படவில்லை. அதனால் அமமுகவை தொடங்கினார். எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவமனை கொண்டுவந்து அதிமுக சாதனை படைத்துள்ளது.

மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்
மத்திய அரசின் உதவி பெற்று ஏராளமான திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். திமுக என்ன திட்டங்களை கொண்டு வந்தது. அதிமுகவில் எள்முணை அளவுகூட பிரச்சினை இல்லை. திமுகவினர் தவறான பிரசாரம் செய்து வருகின்றனர். எனக்கு அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உருட்டல், மிரட்டலுக்கு நான் அஞ்சமாட்டேன்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications