சேலத்தில் முதல்வர் எடப்பாடியாருடன் ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் திடீர் ஆலோசனை - பரபர அதிமுக
சேலம்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்கள் திடீரென ஆலோசனை நடத்தி இருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அமைச்சர்கள் தொகுதிகளில் அதிக அளவு வாக்குகள் பதிவாகி இருந்தன. சில அமைச்சர்களின் தொகுதிகளில் 76% முதல் 85% வரை வாக்குகள் பதிவாகி இருந்தன.

அதிக வாக்குகள் பதிவு
அமைச்சர்கள் தொகுதிகளில் மட்டுமே எப்படி அதிக வாக்குகள் பதிவானது என்பது தொடர்பாக அதிமுக தலைமையும் ஆச்சரியமடைந்துள்ளது. திமுகவும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

சேலத்தில் அமைச்சர்கள்
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த ஊழல் புகார்களுக்கு உள்ளான அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், உதயகுமார், எம்.சி. சம்பத், கே.சி. வீரமணி ஆகியோர் நேற்று திடீரென சேலம் சென்றனர்.

எடப்பாடியாருடன் ஆலோசனை
சேலத்தில் தங்கி உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்த அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது வாக்கு பதிவு எப்படி அதிகமாக விழுந்தது? இது சாதகமா? பாதகமா? என்பது தொடர்பாக முதலில் விவாதிக்கபட்டதாம்.

ஊழல் வழக்குகளா?
அடுத்ததாக ஒருவேளை திமுக ஆட்சி அமைத்தால் ஊழல் வழக்குகளை தொடரத்தான் செய்வார்கள். இந்த ஊழல் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி? என்பது தொடர்பாகவும் முதல்வருடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினராம். அப்போது சில அமைச்சர்கள் ரொம்பவே கலக்கத்தையும் வெளிப்படுத்தினார்களாம்.

ப்ளான் போட்டு தந்த சுனில் டீம்
இதுபற்றி அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, திமுகவுக்கு எப்படி பிரஷாந்த் கிஷோர் இருக்கிறாரோ அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சுனில் டீம் தீயாக வேலை செய்கிறது. இந்த சுனில் டீம் ஆலோசனைப்படிதான் சசிகலாவை கட்சியிலேயே சேர்க்க கூடாது என முடிவெடுத்தாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தற்போதும் அடுத்த கட்டமாக என்னென்ன முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பட்டியல் போட்டு கொடுத்துள்ளதாம் சுனில் டீம் அதன்படிதான் இந்த ஆலோசனை என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications