சேலம் விஜய் கூட்டத்தில் வாலிபர் எப்படி இறந்தார்? போலீஸ் பதிவு செய்த கேஸ் என்ன தெரியுமா?
சேலம்: சேலத்தில் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்ற வட மாநில நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சந்தேக மரணம் என்று கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மக்கள் சந்திப்புக்கு பிறகு கிட்டதட்ட 2 மாதங்கள் கழித்து விஜய் திறந்த வெளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதனால், இந்த கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை தவெகவினர் மத்தியில் ஏற்படுத்தியது. மக்கள் சந்திப்புக்கு அனுமதி கிடைக்காததால் நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி தவெகவினர் கூட்டம் நடத்தினர். 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தவெகவினர் கூறினர். இந்த நிபந்தனையை ஏற்று போலீசார் கூட்டத்திற்கு அனுமதி வழங்கினர்.
இருப்பினும் விஜய்யை பார்ப்பதற்காக கூட்டம் நடந்த மைதானத்தின் வெளிப்புறத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். சரியாக மதியம் 12.40 மணிக்கு பேச தொடங்கிய விஜய் 1.10 மணிக்கு தனது பேச்சை முடித்தார். 12 மணி முதல் 3 மணி வரை கூட்டதிற்கு தவெகவினர் அனுமதி கேட்டு இருந்ததால், கடும் வெயிலில் காத்துக்கிடந்தனர்.
அப்போது, கூட்டத்திற்கு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுராஜ் (வயது 37) என்பவர் திடீரென கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்தவுடன் அங்கு இருந்த தவெக நிர்வாகிகள்,அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.விஜய் கூட்டத்தில் பங்கேற்ற வாலிபர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வருத்தம் அளிப்பதாக தவெக தரப்பிலும் கூறப்பட்டது. அந்த இளைஞருக்கு ஏற்கனவே உடல் நல பாதிப்பு இருந்ததாகவும் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் கூறினார்.
இந்த நிலையில், சுராஜ் உயிரிழப்பு தொடர்பாக சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அன்னதானப்பட்டி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். சுரஜ் உடலுக்கு இன்று பிற்பகலுக்குள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல உறவினர்கள் ஏற்பாடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
-
நான்கு பேருக்கே தெரிந்த ரகசியம் லீக் ஆனது எப்படி? ஜனநாயகனுக்காக களத்தில் வந்த நடிகர் விஷால், ஜீவா! -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர் -
குடும்பத்தை பார்க்காதவர் எப்படி மக்களை பார்ப்பார்..சுத்து போட்ட மக்கள்..தெறித்து ஓடிய தவெக வேட்பாளர் -
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெல்வாரா? வெறும் 20 பேர்தானாமே! குஷியில் இனிகோ இருதயராஜ்! -
கன்னியாகுமரியில் இன்று விஜய் அதிரடி! மதியம் 2 மணிக்கு தொடங்கும் மெகா பிரசாரம்.. ரூட் மேப் இதோ -
“ஜனநாயகன் லீக்.. அதிர்ச்சியளிக்கிறது!” அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ரஜினிகாந்த் -
ஜனநாயகன் படம் லீக்கான விவகாரம்.. சிபிஎப்சிதான் காரணமா? தணிக்கை வாரியம் பரபர விளக்கம் -
விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா -
பிரச்சாரக் களத்துக்கு வரும் கமல்ஹாசன்.. விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளும் டார்கெட்! -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
‘ஜனநாயகன்’ லீக் ஆனது தவறு இல்ல.. ஆதங்கத்துடன் நடிகர் சூரி போஸ்ட்.. விஜய்க்கு சப்போர்ட்டுக்கு வந்த விஜய் தேவரகொண்டா -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி












Click it and Unblock the Notifications