வேலூரில் ஏலகிரி டூ சேலம் ஏற்காடு.. தமிழக அரசு குட் நியூஸ்.. சல்லுனு போகலாம்.. சுற்றுலா பயணிகள் குஷி
சேலம்: தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஏலகிரி ஏற்காடு மலைப்பிரதேசங்கள் தொடர்பாகவும் ஏராளமான அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.. குறிப்பாக சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் செயல்பாடுகள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
தமிழகத்திலுள்ள மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கிறது ஏற்காடு.. சேலத்திலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை என்பது அதிகமாகவே இருக்கும்..

அதேபோல திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலையை ஏழைகளின் ஊட்டி என்றும், மலைகளின் இளவரசி என்றும் சொல்வார்கள்.. எனவே இங்கும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
சுற்றுலாதுறை வளர்ச்சி
ஏலகிரி, ஏற்காடு இரு சுற்றுலா பகுதிகளிலும், ஏற்கனவே பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட, நடந்து முடிந்த தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரில், சுற்றுலாத் துறை சார்பில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசும்போது, சுற்றுலாத் துறை மேம்படுத்துவதற்காக சில முக்கிய அறிவிப்புகளை முக்கிய வெளியிட்டார்.
குறிப்பாக, சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் அழகினை கண்டு ரசிக்க ரோப் கார் அமைப்பதற்கு தொழில்நுட்ப சாத்திய கூறுகள் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.
ஏற்காடு, ஏலகிரி சுற்றுலா
அதேபோல, . சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி (காவிரி நீர்தேக்கப்பகுதி) ஆகிய சுற்றுலாத் தலங்களில் வாகன நிறுத்துமிடம், பூங்காக்கள், உணவுக்கூடம், நடைபாதை மற்றும் தகவல் மையம் ஆகிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும், ஏலகிரியில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்பது உட்பட ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில்,ஏற்காடு, ஏலகிரி ஆகிய இரண்டு மலை பிரதேசங்களிலும், ரோப் வே திட்டத்திற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் டெண்டர் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விரிவான திட்ட அறிக்கை
ஏற்காடு, ஏலகிரியில் ரோப் வே திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்த டெண்டரை கோரியிருக்கிறது.. டெண்டர் இறுதிசெய்யப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த பிறகு, அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும்.
அதேபோல, எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு ரோப் வே அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி, சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.
உச்சக்கட்ட மகிழ்ச்சி
மலைப்பிரதேசங்களில் பயணிக்கும்போது, அங்குள்ள இயற்கை காட்சிகளை ரசிப்பதற்காகவே ரோப் வே செயல்படுத்தப்படுகிறது.. சிறிய பெட்டியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பயணிகள் உட்கார்ந்து, நீண்ட ஒயரில் சறுக்கிய வாக்கில், தொங்கி கொண்டே பயணிக்கும் வகையில் இந்த ரோப் வே வசதி செய்யப்படுகிறது. இந்த சிறிய பெட்டி, கீழே விழாத வகையில், அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
தற்போது ஏற்காடு, ஏலகிரிக்கு ரோப் வே கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications