"எடு வண்டிய".. என் புருஷனை பார்த்தீங்களா.. ஸ்பீக்கர் வைத்து தேடும் மனைவி.. சிவராமன் சார் கேட்டுச்சா?
காணாமல் போன கணவரை தேடி அலைகிறார் பாசமுள்ள மனைவி
சேலம்: கணவனை காணாமல் ஆட்டோ வைத்து கொண்டு, மனைவி தேடி கொண்டிருக்கிறார்.. இந்த பெண்ணின் சோகம் காண்போரை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.
வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியை சேர்ந்தவர் சிவராமன்.. 45 வயதாகிறது.. மனைவி பெயர் பழனியம்மாள்..
சிவராமன் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து வந்தார்.

மனைவி
ஆனால், இதில் குறைந்த வருமானம்தான் கிடைத்து வந்துள்ளது.. இருந்தாலும், முடிந்தவரையில் மனைவி, குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்து கொண்டிருந்தார்.. பாசத்தோடும் இருந்து வந்தார்.. இந்நிலையில், சிவராமனுக்கு திடீரென ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. கடந்த 7-ந் தேதி காலை தன்னுடைய வீட்டிலிருந்து கிளம்பி வாழப்பாடிக்கு சென்றுள்ளார்.. ஆனால் வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை.. கணவர் வீட்டுக்கு வராததால் மனைவி பதறிவிட்டார்.. எங்கெங்கோ தேடி அலைந்துள்ளர் பழனியம்மாள்..

சிவராமன்
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் சிவராமனை கண்டுபிடிக்க முடியவில்லை.. எனவே, வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார் கொடுத்தார். போலீசாரும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.. ஆனாலும் போலீசாருக்கும் சிவராமன் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை...

ஸ்பீக்கர்கள்
ஒருபக்கம் போலீசார் தேடி வந்தாலும், தானும் சேர்ந்து கணவரை தேட ஆரம்பித்தார்.. காணாமல் போன கணவரை கண்டுபிடிக்க ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து, அந்த ஆட்டோவில் ஸ்பீக்கர் வைத்து ஊர் ஊராக சென்று கணவரை பற்றி மைக்கில் கேட்டு வருகிறார். கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று நோட்டீஸ்களை பிரத்யேகமாக அச்சடித்து வைத்து கொண்டு, அதையும் பொதுமக்களிடம் வழங்கி வருகிறார்..

ஆட்டோ
கிட்டத்தட்ட ஒருவாரத்துக்கு மேலாகவே பழனியம்மாள் ஆட்டோவில் ஏறி, ஊர் ஊராக தன்னந்தனியாக கணவரை தேடி வருகிறார்.. அவர் கையில் கணவரின் போட்டோவையும் வைத்து கொண்டே பயணிக்கிறார்.. சரியாக சாப்பிடுவது கூடஇல்லையாம்.. எந்நேரமும் கணவரின் போட்டோவை பார்த்து பார்த்து அழுதுகொண்டே இருக்கிறார்...

ஆறுதல்
பழனியம்மாளின் நிலைமையை பார்த்து பொதுமக்களும், உன் கணவர் பத்திரமாக வீட்டுக்கு வந்துடுவார்.. நாங்க பிரார்த்தனை செய்கிறோம், தகவல் தெரிந்தால் உடனே சொல்கிறோம்" என்று பழனியம்மாளுக்கு நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.. கையில் போட்டோவும், கண்ணில் நீர் ததும்ப பழனியம்மாளின் சோகம் தொடர்கிறது.. மிஸ்டர் சிவராமன், எங்கே இருக்கீங்க நீங்க.. பழனியம்மாள் பாவம் இல்லையா?!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications