Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெறித்தனம்".. பாலை எடுத்து வந்த மனைவி.. பிறகு சாப்பாடு ஊட்டிவிட்டு.. போலீஸையே மிரள செய்த "ஒத்தரோசா"

கள்ளக்காதலனுக்காக, விஷம் வைத்து கணவனை கொன்றுள்ளார் மனைவி

Subscribe to Oneindia Tamil

சேலம்: கள்ளக்காதலனை கைவிட முடியாது என்று திட்டவட்டமாக கணவனிடம் சொல்லிவிட்டார் மனைவி.. இதற்கு பிறகுதான் அப்படி ஒரு முடிவை எடுத்தார்.

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்துள்ளது காரைக்காடு என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் சக்திவேல்.. 37 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் புகழரசி.. 27 வயதாகிறது.

இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.. இந்த நிலையில் சக்திவேல் திடீரென இறந்துவிட்டார்.. நோய்நொடியும் இல்லாமல், விபத்தும் இல்லாமல், திடீரென அவர் இறந்தது, குடும்பத்தில் சந்தேகத்தை கிளப்பியது..

 கள்ள உறவு

கள்ள உறவு

அதனால், சக்திவேலின் தம்பி முத்துசாமி, கொளத்தூர் ஸ்டேஷனில், தன் அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக புகார் சொன்னார்.. முத்துசாமியின் புகாரின்பேரில் போலீசாரும் சக்திவேலின் சடலத்தை மீட்டனர்.. போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்... அப்போதுதான், புகழரசியின் செய்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.. அதனால், புகழரசிக்கே தெரியாமல் விசாரணையை ரகசியமாக ஆரம்பித்தனர்.

 டவுட் - புகழரசி

டவுட் - புகழரசி

அப்போது, முத்துக்குமார் என்ற இளைஞர் பெயர் அடிபட்டது.. இவருக்கு 29 வயதாகிறது.. இந்த இளைஞருடன் புகழரசிக்கு கள்ளக்காதல் இருந்தது உறுதியானது.. இதற்கு பிறகு, கொளத்தூர் போலீஸார், புகழரசியையும், முத்துக்குமாரையும் கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.. போலீசார் விசாரிப்பதற்கு முன்பாகவே, எல்லா உண்மையையும் கடகடவென கொட்ட ஆரம்பித்துவிட்டார் புகழரசி... போலீசாரிடம் அதுகுறித்து வாக்குமூலமும் தந்தார்.

 பரிதாப முத்துக்குமார்

பரிதாப முத்துக்குமார்

"என் கணவர் மது அருந்தும் பழக்கம் உடையவர்.. இது தொடர்பாக அடிக்கடி எங்களுக்குள் தகராறு வரும்.. இந்நிலையில்தான், பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்துக்குமாருக்கும் எனக்கும் சில வருடங்களாகவே கள்ள உறவு இருந்தது.. அடிக்கடி நாங்கள் தனிமையில் இருந்தோம்.. இது என் கணவருக்கு ஒருநாள் தெரிந்துவிட்டது.. பலமுறை கண்டித்தார்.. என்னால், முத்துக்குமாரை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை.. அதனால்தான் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம்..

 தூக்க மாத்திரை

தூக்க மாத்திரை

சம்பவத்தன்று நைட் வீட்டுக்கு வந்தவர் குடிக்க தண்ணி கேட்டார்.. அந்த தண்ணீரில் 10 தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து தந்தேன்.. பிறகு பாலில் விஷம் கலந்து தந்தேன்.. தண்ணீரில் உள்ள தூக்க மாத்திரை, பாலில் உள்ள விஷம், இரண்டையும் குடித்துவிட்டு, உடனே மயங்கிவிட்டார்.. ஒருவேளை, இதிலும் அவர் உயிர் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்று நினைத்து பதறிப்போய்விட்டேன்.

 சாப்பாட்டில் விஷம்

சாப்பாட்டில் விஷம்

பிறகு கிச்சனுக்கு சென்று, டீ போட்டேன்.. அந்த டீ-யில் தோட்டத்தில் இருந்த விஷத்தை கலந்து தந்தேன்.. இதிலும் உயிர் பிழைத்து கொண்டால் என்ன செய்வது என்று நினைத்து, தட்டில் சாப்பாடு போட்டு, அதிலும் விஷம் கலந்தேன்.. அந்த சாப்பாட்டை மயங்கி விழுந்து கிடந்த என் கணவனுக்கு நானே ஊட்டிவிட்டேன்.. தொடர்ந்து விஷம் ஏறியதால் அவர் துடிதுடித்து இறந்துவிட்டார்.." என்றார் புகழரசி.. இப்போது இந்த ஜோடி ஜெயிலில் உள்ளது..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+