சேலம் எருமாபாளையம் பாழடைந்த பங்களாவில் எல்லாமே அப்படி.. ஆடிப்போன போலீஸ்.. 13 பேர் சுற்றிவளைப்பு
சேலம்: சேலம் எருமாபாளையம் மெயின் ரோடு ஆறுமுகம் நகர் அருகிலுள்ள பாழடைந்த பங்களாவில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிச்சிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சோதனை நடத்திய போலீசார் எருமாபாளையத்தில் பாழடைந்த பங்களாவில், போதை மாத்திரைகள், ஊசிகளை பதுக்கி வைத்திருந்த 13 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சேலம் எருமாபாளையம் மெயின் ரோடு ஆறுமுகம் நகர் அருகிலுள்ள பாழடைந்த பங்களாவில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிச்சிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் உத்தரவிட்டார்.

நேற்று இரவு பங்களாவை சுற்றி வளைத்த போலீசார் அங்கு பதுங்கி இருந்த, கிச்சி பாளையத்தைச் சேர்ந்த சண்முகம், சீனிவாசன், முனியப்பன், செட்டியப்பன், சுதர்சன், கிஷோர், கௌஷிக், கௌதம் ராஜ், ஆதிகேசவன், அம்மாபேட்டை சேர்ந்த விக்ரம், அக்பர், சரவணன் ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 1500 வலி மாத்திரைகள், அவற்றை போதை ஊசிகளாக மாற்றம் செய்து பயன்படுத்தும் சிரஞ்ச் 25, ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தர்மபுரி வார்டன் சஸ்பெண்ட்
தர்மபுரி மாவட்ட சிறையில் கைதியை பார்க்க வந்த உறவினரிடம் ரூ.400 லஞ்சம் வாங்கிய 2 வார்டன்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு குற்ற செயல்கள் தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் தர்மபுரியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்த சிறையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வருபவர்களிடம் சிலர் பணம் வசூலிப்பதாக சிறைத்துறை லஞ்சஒழிப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட சிறையில் பணிபுரிபவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் சில தகவல்கள் வெளியானது. இதன்படி, மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தர்மபுரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை பார்ப்பதற்கு அவருடைய சகோதரி சிறைக்கு வந்திருக்கிறார். அப்போது அவரிடம் சிறை வார்டர்கள் திருப்பதி, சவுந்தர்ராஜன் ஆகியோர் ரூ.400 லஞ்சம் வாங்கி இருப்பது சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வார்டர்கள் திருப்பதி, சவுந்தர்ராஜன் ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து சிறைத்துறை எஸ்பி வினோத் உத்தரவிட்டார். சிறையில் கைதியை பார்க்க வந்த உறவினரிடம் லஞ்சம் பெற்ற 2 வார்டர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறைத்துறை ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications