மனிதநேயமே ஒளிர்கிறது.. நெகிழ்ந்து போய் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு.. சேலம் விவகாரத்தில்!
சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட தாய், மகளை உயிரை பணயம் வைத்து இளைஞர்கள் காப்பாற்றினார்கள். அவர்களின் துணிச்சலை பாராட்டி முதல்வர் ஸ்டாலின், தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
Recommended Video
இதனிடையே காப்பாற்றிய இளைஞர்கள் மலை ஏறும் போது ஆற்றில் தவறி விழுந்தனர். தவறி விழுந்த இளைஞர்கள், நல்ல வேளையாக நீச்சல் அடித்து கரையேறினார்கள். யாருக்கும் இந்த சம்பவத்தில் எதுவும் ஆகவில்லை. காற்றாற்று வெள்ளம் பாய்ந்தோடுவதால் சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் வனத்துறை தற்போது தடைவிதித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது, இதை வனத்துறையினர் சுற்றுலா தலமாக பராமரித்து வருகின்றனர்.

முட்டல் ஏரி
படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் வசதி , வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா, மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது, விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

ஆணைவாரி
இந்நிலையில் ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர். அப்போது கல்வராயன் மலை தொடர்ச்சி பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக்காரணமாக ஆணைவாரி நீர் வீழ்ச்சியில் திடிரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

5 பேர் சிக்கினர்
அப்போது நீர்வீழ்ச்சியில் குளித்து கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 5 பேர் சிக்கி கொண்டுள்ளனர்,அவர்கள் அங்கிருந்து தப்பிக்க நீர்வீழ்ச்சியின் இடது புறமாக உள்ள பாறை மீது ஏறியுள்ளனர். அப்போது தாய் மற்றும குழந்தையை காப்பாற்றிய இளைஞர்கள் இரண்டு பேர், ஆற்றில் தவறி விழுந்துள்ளனர்.

வீடியோ வைரல்
பினனர் அந்த இரண்டு வாலிபர்களும் நீச்சலடித்து கரை சேர்ந்து உயிர் பிழைத்துள்ளனர், இதை நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார், இதனை தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது, இதனையடுத்து ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மனிதநேயம் ஒளிர்கிறது
இதனிடையே முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள். தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது! பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்! என்று கூறியுள்ளார்.

வெள்ளக்காலங்களில் கவனம்
இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, இந்த சம்பவத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம். ஆபத்தான இடங்களுக்கு செல்லக்கூடாது. மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதால், அருவிகளுக்கு செல்வது ஆபத்தானது. பெண்கள், குழந்தைகளுடன் அங்கு குளிக்க செல்வது அபாயகரமானது.இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களை செய்யவே கூடாது. மழைக்காலங்களில் நீர் நிலைகள், நிலச்சரிவு ஏற்படும் மலைகளுக்கு செல்லவே கூடாது. இன்னொன்று ஆபத்தான காலங்களில் உதவ வேண்டும். சரியான நேரத்தில் சரியான உதவி கிடைக்கப்பெற வேண்டும். உதவி செய்ய தயங்கவும் கூடாது என்றார்கள்.
-
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
7 நாட்கள் 7 அறிக்கைகள்.. விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் திமுக.. சொல்ல வருவது ஒரே மேட்டர் தான் -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications