2 முறை கர்ப்பமாகி.. அபார்ஷன் செய்து.. கதறிய பிரியா.. பதறிப் போன சேலம் கலெக்டர் ஆபீஸ்!
காதல் தோல்வி காரணமாக இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
சேலம்: 2 முறை கர்ப்பமாகி, அபார்ஷனும் செய்துள்ளார் பிரியா.. காதலனை நம்பி தன்னை இழந்ததுடன், தற்கொலைக்கும் முயன்றுள்ள சம்பவம் சேலம் கலெக்டர் ஆபீசில் பரபரப்பை தந்துவிட்டது.
சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் இந்து பிரியா.. 30 வயதாகிறது.. ஒரு பிரைவேட் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார்.

சேலம் செட்டிச்சாவடி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன்.. அவருக்கும் 30 வயதாகிறது..இவர் டிகிரி முடித்துவிட்டு, ஒரு பிரைவேட் காலேஜில் படித்து வருகிறார்.. சூப்பர் மார்கெட்டிற்கு அடிக்கடி செல்லும்போதுதான், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது... மொத்தம் 5 வருட தீவிரமான காதல் இது.
இந்த 5 வருடத்தில் பிரியா 2 முறை கர்ப்பமுற்று கலைத்துவிட்டார்.. இதையடுத்து கடந்த 3 மாதங்களாக காதலர்களிடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.. இந்த சமயத்தில்தான், கலைச்செல்வனுக்கு வீட்டில் வேறு பெண்ணை பார்த்து நிச்சயம் நடந்தது.. கலைச்செல்வன், இவரது அப்பா ராஜ் என்பவர், திமுக ஊராட்சி துணை செயலாளராக உள்ளார்.
கலைச்செல்வனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் நடந்ததை அறிந்த பிரியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் அம்மாப்பேட்டை ஸ்டேஷனில் காதலன் மீது புகார் தந்தார்.. ஆனால் போலீசாரோ அந்த புகாரை பெற்றுக் கொண்டதோடு சரி.. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இரு தரப்பையும் அழைத்து பேசி சமாதானம் செய்தும் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மறுநாளே, அதாவது கடந்த திங்களன்று கலைச்செல்வனுக்கும் அந்த பெண்ணுக்கும் கல்யாணம் நடந்தது. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பிரியா, சேலம் கலெக்டர் ஆபீஸ் வந்தார்.. பிறகு திடீரென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை தன்மீது கொட்டி தீக்குளிக்க முயன்றார்.
ஆனால் அதற்குள் அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று பிரியாவை மீட்டனர்.. அப்போது பிரியா ஒரு லெட்டரை கையில் வைத்திருந்தார்.. அதை வாங்கி பார்த்தபோது, அம்மாபேட்டை மகளிர் போலீசார், கலைச்செல்வனிடம் பணம் வாங்கி கொண்டு, தான் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதற்கு பிறகு பிரியாவை சமாதானம் செய்த போலீசார், அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications